நாட்டில் உள்ள பல்கலைகள், கல்லுாரிகள் குறித்து, பொதுமக்கள், கல்வியாளர்களிடம், நாளை முதல் கருத்து கேட்பு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் இணையதளத்தில், கருத்துக்களை பதிவு செய்யலாம். உலகில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றின் கல்வித்தரம் குறித்து, ஆண்டுதோறும், அமெரிக்காவிலுள்ள, கியூ.எஸ்., நிறுவனம், தர பட்டியல் வெளியிடும். இதில், சில இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும்.
நாட்டில் உள்ள அனைத்து கல்லுாரிகள், பல்கலைகளும் இடம்பெறும் வகையில், கடந்த ஆண்டு முதல், இந்திய அரசு, தரவரிசை பட்டியல் வெளியிடுகிறது. தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பின் மூலம், இதற்கான ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டுக்கான ஆய்வு அறிக்கைகள், கல்லுாரி, பல்கலைகளில் பெறப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து, நாளை முதல், பிப்., 15 வரை, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. தேசிய தரவரிசை அமைப்பின், https:/www.nirfindia.org/ என்ற இணையதளம் மூலம், பொதுமக்கள், தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.