பிப்., 19ல் நடக்கும், ’குரூப் - 1’ தேர்வில், தமிழக முதல்வர் குறித்து கேள்விகள் இடம்பெறுமோ என, தேர்வர்கள் அச்சத்தில் உள்ளனர். அரசு துறைகளில், 29 துணை ஆட்சியர்கள் உட்பட காலியாக உள்ள, 85, ’குரூப் - 1’ பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு, வரும், 19ல் நடக்கிறது. இதற்காக, 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, நேற்று முன்தினம் முதல் இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், வினாத்தாள் எளிதாக இருக்குமா; என்னென்ன கேள்விகள் இடம்பெறும் என, ’குரூப் - 1’ தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில், டிசம்பருக்கு முன் ஒரு முதல்வர், பின், மற்றொரு முதல்வர், தற்போது யாரென்றே தெரியாத நிலையில், இது குறித்த கேள்வி இடம்பெற்றால் என்ன பதில் எழுவதென தெரியாமல், தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment