Pages

Friday, February 3, 2017

பள்ளிகளில் உபரி பணியிடம்திருப்பி ஒப்படைக்க உத்தரவு

அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்களை திருப்பி ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி 2016 ஆக., 1 ல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

இதில் உபரி ஆசிரியர்களாக கணக்கிடப்பட்டோர் வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். ஆனால் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்கள் அப்படியே இருந்தன.

தற்போது அந்த பணியிடங்களை காலியிடங்களாக காட்டி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது; அப்பணியிடங்களை பள்ளிக் கல்வி இயக்குனரின் பொதுத் தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும். அதனை பள்ளி அளவை பதிவேட்டில் (ஸ்கேல் ரிஜிஸ்டர்) பதிவு செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.