Pages

Monday, February 13, 2017

’விருட்சுவல் கிளாஸ் ரூம்’ மூலம் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பு!

’விருட்சுவல் கிளாஸ் ரூம்’ மூலம், பொதுத்தேர்வு குறித்த பயம், பதற்றத்தை மாணவர்களிடம் போக்கி, அதிக மதிப்பெண்கள் பெற, வழிகாட்டி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் கற்பித்தல் முறையை மாற்றும் நோக்கில், அதிதொழில்நுட்ப வசதியுடன், பள்ளிகளை இணைக்க, விருட்சுவல் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு, 25 பள்ளிகளில், இத்திட்டம் செயல்படுகிறது. 


ஒரு நோடல் மையத்தில், ஆசிரியர் எடுக்கும் வகுப்பில், 25 பள்ளி மாணவர்களும் பங்கேற்று, சந்தேகங்களை கேட்டறியலாம். செய்முறை வகுப்புக்கு, இத்தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக இருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதில், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி பேராசிரியர்கள் கொண்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழிகாட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

பயம், பதற்றம் இன்றி தேர்வை எதிர்கொள்வது குறித்து, ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கோவை மாவட்டத்தில், இத்திட்டத்தை துவங்க, ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி முதல்வர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

’விருட்சுவல் கிளாஸ் ரூம்’ அமைத்ததன் நோக்கம், ஒரே நேரத்தில், பல பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து, வகுப்பு நடத்துவதே ஆகும். இதில், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 75 பள்ளிகளுக்கு, பேராசிரியர் ராஜன், கடந்த 10ம் தேதி திருக்குறளின் சிறப்பு குறித்து வகுப்பு நடத்தினார்.

இதையடுத்து, பொதுத்தேர்வு பாடத்திட்டம், நேரம், படிக்கும் முறை, கேள்விகளுக்கு விடையளிக்கும் முறை, அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்து, மாணவர்களுக்கு வழிநடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி பேராசிரியர்கள் கொண்டு, முன்வரைவு தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. விரைவில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கான ஆலோசனை வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.