Pages

Monday, February 20, 2017

பிளஸ் 2 தேர்வுக்கான 'கவுன்டவுன்' ஆரம்பம்

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு துவங்க, 10 நாட்களே உள்ளதால், மாணவர்கள் யாரும் விடுபடாமல், 'ஹால் டிக்கெட்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல், துவங்குகிறது. 
மாநிலம் முழுவதும், 6,600 பள்ளிகளை சேர்ந்த, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்கின்றனர்; 2,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்' தேர்வுத்துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

'மாணவர்கள் யாரும் விடுபடாமல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொடுத்து, தேர்வில் பங்கேற்கச் செய்ய வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளும், பெற்றோரை அழைத்து கூட்டம் நடத்தி, 'பிள்ளைகளை தேவையின்றி, மன அழுத்தத்திற்கு ஆளாக்க கூடாது. தேர்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அளிக்க வேண்டும்' என, ஆலோசனை வழங்கிஉள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.