Pages

Tuesday, February 7, 2017

2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும், வரும் 24 -ஆம் தேதிக்குள் (பிப்.24) சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

வங்கிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு பிப்ரவரி 28 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் காலியாக உள்ள இடங்களில் அவர்களை நியமனங்களைச் செய்வார். கூடுதல் விவரங்களை www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.