Pages

Friday, February 17, 2017

தமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு.


தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களில் நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரைச் சேர்ந்த ராஜசெல்வன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையின் அடிப் படையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக் கப்பட்டது.


  இந்த நூலகங்கள் தற்போது பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. பல இடங்க ளில் நூலகங்கள் ரேஷன் கடைக ளாகவும், கிராம நிர்வாக அலுவலக மாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர் களும், பொதுமக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, இந்த நூலகங் களை பராமரித்து மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்''என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, ''தமிழகத்தில் 2006-ல் 12,522 நூலகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 10,447 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. 2,075 நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன"என்றார். இதையடுத்து, காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களில் நிரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.