Pages

Wednesday, February 15, 2017

மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் உருவாக்கப்படும்

பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவை வருமாறு:


* அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் உருவாக்கப்படும். இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரம் ஆக உயரும்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 76 பேர் சேர்க்கப்படுவர். அதன்பின்னர் உள்துறை அமைச்சக பணியாளர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 778 ஆக அதிகரிக்கும்.

* போலீஸ் துறையில் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் புதிதாக இணைவர். அதன்பின்னர் இந்த துறையில் பணியாளர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 689 ஆகிவிடும்.

* வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 2 ஆயிரத்து 109 பேர் பணி அமர்த்தப்படுவார்கள்.

* புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறையில் 2 ஆயிரத்து 27 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த தகவல்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.