Pages

Friday, February 3, 2017

புதிய வாக்காளர்களுக்கு பிப்., 15ல் அடையாள அட்டை

''புதிய வாக்காளர்களுக்கு, பிப்., 15 முதல், அடையாள அட்டை வழங்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி கூறினார். அவரது பேட்டி:தமிழகம் முழுவதும், ஜன., 5ல், புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், புதிதாக, 15.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களில், 2.32 லட்சம் பேர், தங்கள், மொபைல் போன் எண்களை கொடுத்திருந்தனர். அவர்களுக்கு, ரகசிய குறியீடு எண், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.


அதை, அருகில் உள்ள, இ - சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறலாம். அதற்குரிய பணத்தை, இ - சேவை மையங்களுக்கு, தேர்தல் கமிஷன் வழங்கும். மொபைல் எண் கொடுக்காத வாக்காளர்களுக்கு, பிப்., 15 முதல், இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

அதற்கு முன், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பினால், இ - சேவை மையங்களில், 25 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். வாக்காளர்கள், '1950' என்ற, கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கள் மொபைல் எண்களை கொடுக்கலாம். அவர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.