Pages

Friday, January 27, 2017

அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்! மத்திய அரசு!!

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நான்கு வகையான பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அவை ஆர்டினரி, அஃபிசியல், டிப்ளோமேட்டிக் மற்றும் ஜம்போ. ஆர்டினரி பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், அஃபிசியல் பாஸ்போர்ட் அரசாங்க 
ஊழியர்களுக்கும், டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், ஜம்போ பாஸ்போர்ட் வணிகம் சம்பந்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, பாஸ்போர்ட் இன்றியமையாத ஒரு விஷயமாக உள்ளது.

குஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தை நேற்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் திறந்துவைத்தார். இதுகுறித்து அவர், ‘ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

கல்லுாரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஸ்டூடண்ட் கனெக்ட் சேவை மூலம் நாட்டில் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.