Pages

Wednesday, January 4, 2017

வங்­கிகள் அதி­ரடி வட்டி குறைப்பு; வீடு விற்­பனை அதி­க­ரிக்கும்

மத்­திய அரசின் பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை; சில தினங்­க­ளுக்கு முன், பிர­தமர் மோடி, வீட்டு வசதி கட­னுக்கு அறி­வித்த வட்டிச் சலு­கைகள் ஆகி­ய­வற்றால், வீடு விற்­பனை அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையை தொடர்ந்து, கடந்த ஆண்டு, நவ., 8 – டிச., 10 வரை, வங்­கி­க­ளிடம், 12.44 லட்சம் கோடி ரூபாய் குவிந்­துள்­ளது. இதனால், நடப்பு நிதி ஆண்டில், வங்­கி­களின், ‘டிபாசிட்’ வளர்ச்சி, 13.6 சத­வீதம் அதி­க­ரித்து, 105.90 லட்சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. ஆனால், கடன் வளர்ச்சி, 1.2 சதவீதம் குறைந்­துள்­ளது. குறிப்­பாக, தொழில் துறையின் கடன் வளர்ச்சி, 5.5 சத­வீதம் சரி­வ­டைந்து உள்­ளது. அது போல, வீட்டு வசதி மற்றும் வேளாண் துறை­களின் கடன் வளர்ச்சி, முறையே, 9.9 சத­வீதம் மற்றும் 2.2 சத­வீதம் குறைந்­துள்­ளது. அதனால், வங்­கிகள், வட்டியை குறைத்து, தாரா­ள­மாக கடன் வழங்க வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­யுள்­ளன. 
இந்­நி­லையில், பிர­தமர் மோடி, தன் புத்­தாண்டு வாழ்த்துச் செய்­தி யில், வீடு, தொழில், வேளாண் துறை­க­ளுக்கு, பல்­வேறு சலு­கை­களை அறி­வித்தார். வீட்டு வசதி கட­னுக்கு, 4 சத­வீத வட்டி மானியம், விவ­சா­யி­க­ளுக்கு, 60 நாள் வட்டி தள்ளுபடி, சிறிய, நடுத்­தர நிறு­வன கடன் வரம்பு, 1 கோடி ரூபாயில் இருந்து, 2 கோடி ரூபா­யாக உயர்வு என, அவர் அறி­வித்த சலு­கைகள், அனைத்து தரப்­பினரையும் கவர்ந்­துள்­ளன. இத்­த­கைய சாத­க­மான சூழலை பயன்­ப­டுத்தி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்­ளிட்ட பெரும்­பான்­மை­யான வங்­கிகள், கட­னுக்­கான வட்­டியை, கால அளவின் அடிப்­ப­டையில், 0.60 – 1.48 சத­வீதம் வரை அதி­ர­டி­யாக குறைத்­துள்­ளன. இதனால், சில ஆண்­டு­க­ளாக, மந்த நிலையில் உள்ள வீட்டு வசதி துறை, எழுச்சி காணும் என, இத்­துறை சார்ந்­த­வர்கள் தெரி­வித்து உள்­ளனர்.
ராஜீவ் தல்வார், தலைமை செயல் அதி­காரி, டி.எல்.எப்.: கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, வீடு விலை, 25 – 30 சத­வீதம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. தற்­போது, வீட்டு வசதி கட­னுக்­கான வட்டி குறைந்­துள்­ளதால், வீடு விற்­பனை அதிகரிக்கும். அன்குர் தவான், தலைமை வர்த்­தக அதி­காரி, பிராப் டைகர் டாட் காம்: இது, ரியல் எஸ்டேட் துறைக்கு அளிக்­கப்­பட்ட, புத்­தாண்டு பரிசு. வீட்டு வசதி கடன் சுமை குறையும் என்­பதால், பலர் வீடு­களை வாங்க ஆர்வம் காட்டுவர். அனுஜ் பூரி, தலைவர், ஜே.எல்.எல்., இந்­தியா: வீடு­க­ளுக்­கான தேவை பெருகும். குறைந்த வட்­டியில் கடன் கிடைப்­பதால், வீடு வாங்க, நீண்ட கால­மாக திட்­ட­ மிட்டு வரு­வோரின் கனவு நனவாகும்.

வங்கி வட்டி குறைப்பு (சத­வீ­தத்தில்)ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா - 8.15- (0.90)பஞ்சாப் நேஷனல் பேங்க் - 8.45 - (0.70)தேனா பேங்க்- 8.55 - (0.75)ஆந்­திரா வங்கி - 8.65 -(0.80)யூனியன் பேங்க் ஆப் இந்­தியா - 8.65 -(0.90)பந்தன் பேங்க் - 10.52 - (1.48)

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.