Pages

Monday, January 2, 2017

பொங்கலுக்கு முன் சென்னைக்கு புயல் ஆபத்து? வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

'பொங்கலுக்கு முன், சென்னையை புயல் தாக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை, 2016 அக்., 30ல் துவங்கியது. இதில், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை; வழக்கத்தை விட, 60 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. பருவமழை காலத்தில், கியான்ட், நடா மற்றும் வர்தா என, மூன்று புயல்கள் உருவாகின.



வர்தா புயல், டிச., 12ல், சென்னையில் பலத்த சூறாவளியுடன் கரையை கடந்தது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு உடைமைகள், பயிர்கள், அரசு சொத்துகள் சேதம் அடைந்தன. பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதன்பின், மூன்று வாரங்களாக, தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை. ஏரி, குளங்கள், அணைகள் உட்பட, நீர்நிலைகள் எல்லாம் வறண்டுள்ளன. 'மீண்டும் எப்போது மழை வரும்' என, விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில், வங்கக்கடலில், இலங்கைக்கு தெற்கே, பூமத்திய ரேகையை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. 'இது, படிப்படியாக வலுப்பெற்று, வட கிழக்கில் நகர்ந்து, அந்தமான் அருகே வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளது. புயல் உருவானால், வரும், 11ல், சென்னை அல்லது நெல்லுார் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.