Pages

Monday, January 9, 2017

பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில், எந்த எண்ணை ஆய்வுக்காக பயன்படுத்துவது என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.


புகார்கள் வந்தன

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடக்கிறது. இதில், 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். பொது தேர்வுக்கு பின், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில், பதிவு எண் இடம்பெறும். ஆனால், வெறும் பதிவு எண் மட்டும் இருப்பதால், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் உலா வருவதாக புகார்கள் எழுந்தன.


எனவே, சான்றிதழின் பாதுகாப்புக்காக, கடந்த தேர்வின் போது, 14 இலக்க தனி அடையாள எண் உருவாக்கப்பட்டு, அந்த எண், சான்றிதழில் பதிவு செய்யப்பட்டது. 

முடிவு செய்யப்படவில்லை 

இந்த ஆண்டு, 14 இலக்க தனி அடையாள எண்ணுடன், எமிஸ் என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் அடையாள எண், ஆதார் எண் மற்றும் பதிவு எண் என, நான்கு விதமான எண்களை, மாணவர்கள் பயன்படுத்த உள்ளனர்.

இவற்றில், எந்த எண்ணை பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் பயன்படுத்துவது என, பள்ளி கல்வித்துறை இன்னும் முடிவு செய்யவில்லை. 

நான்கு எண்களையுமே பயன்படுத்தினால், போலிகளை தடுக்கவும், சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு செய்யவும், வலுவான ஆதாரமாக இருக்கும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் விரும்புகின்றனர். அது, நடைமுறைக்கு வருமான என்பது, சில நாட்களில் தெரிந்து விடும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.