Pages

Friday, January 6, 2017

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்; ’இஸ்ரோ’ தகவல்

”மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஐந்து ஆண்டுகளில் இது நிறைவேறும்,” என, ’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் முதுநிலை விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.


விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப கண்காட்சியை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:

வெளிநாடுகளில் உடல் நலம், சுகாதாரம் குறித்து உயிரியல், ’நானோ’ அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. மந்தபுத்தி உள்ளவர்களுக்கு ’நியூரான்’ செலுத்தி சோதனை நடக்கிறது. 

அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூக ரீதியில் மாறி வருகின்றன. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் குச்சியில், ’சென்சார்’ கருவிகள் பொருத்தினால் துணை இல்லாமல் செல்லலாம். இந்த ’சென்சார்’ குறைந்த விலையில் சிங்கப்பூரில் கிடைக்கிறது. 

’இஸ்ரோ விண்வெளி வாரம்’ ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பரில் நடக்கிறது. அப்போது பள்ளி, கல்லுாரிகளில் ராக்கெட் தயாரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 

இந்தியாவில் இருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்த 5 ஆண்டுகளில் இது நிறைவேறும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.