Pages

Tuesday, January 3, 2017

காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வு குழு; புதிய ’பார்மேட்’ !


மதுரை காமராஜ் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவத்தில் (பார்மேட்) இடம் பெற்ற காலங்களில் போதிய விபரங்கள் குறிப்பிட முடியவில்லை என பேராசிரியர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.


இப்பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ளது. பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் புதிய துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் ராமசாமி ராஜினாமாவை அடுத்து, ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.


இக்குழு முதல் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. அப்போது ’புதிய துணைவேந்தர் பணிக்கு மீண்டும் விண்ணப்பம் பெறுவது,’ என முடிவு செய்யப்பட்டு ஜன.,20 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.


இக்குழு தற்போது பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிப்படி புதிய படிவம் (பார்மேட்) வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் பேராசிரியர் இதை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இந்த ’பார்மேட்’டில் பல சிறப்பு தகுதிகளை குறிப்பிட முடியவில்லை என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


அவர்கள் கூறியதாவது:


யு.ஜி.சி., விதிப்படி 10 ஆண்டுகள் பேராசிரியராக பதவி ஆற்றியதுடன் உயர் கல்வித்திறன், தேசிய மற்றும் சர்வதேச உயர்கல்வி குறித்த அறிவு, அனுபவம், உயர்கல்வி நிபுணத்துவம் மற்றும் நிர்வாக அனுபவம் ஆகிய மூன்று பிரிவுகளில் 15 காலங்களை நிரப்பும்படி ’பார்மேட்’ உருவாக்கப்பட்டுள்ளது. 


இதில், 1, 2, 3 மற்றும் 4வது காலங்களை நிரப்புவதில் குழப்பம் ஏற்படுகிறது.குறிப்பாக, காலம் 5ல் நிர்வாக அனுபவம் குறித்த தலைப்பில், உட்பிரிவில் ’அகடமிக்’ அனுபவங்கள் குறித்தே நிரப்பும் வகையில் காலங்கள் உள்ளன. காலம் ’6ஏ’வில் கல்வித்திறன் அனுபவம், ’6பி’யில் உயர்கல்வியில் பங்காற்றிய அனுபவம் குறித்து விபரம் கேட்கப்பட்டுள்ளன. 


ஆனால், எந்த வகையான பங்களிப்பு என குறிப்பிட முடியவில்லை.உதாரணமாக, உயர்கல்வி மதிப்பீட்டு குழுவில் இடம் பெற்றது, பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்று நம் நாட்டின் கல்வி வளர்ச்சி குழுவில் இடம் பெற்றதற்கான விபரம் போன்றவை குறிப்பிட காலங்களில் வாய்ப்பளிக்கவில்லை. மேலும் ’6டி’யில் ’பொசிஷன் ஆப் சேர்’ என கேட்கப்பட்டுள்ளது. 


இது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வித்தர இன்ஸ்டிடியூட்ஸ் மற்றும் சர்வதேச ஏஜன்சி நிறுவனங்களில் அனுபவம் இருக்கும் பட்சத்தில் தான் நிரப்ப முடியும்.


இதுபோன்று ’பார்மேட்’டில் உள்ள 15 காலங்களில் (ஐட்டம்ஸ்) நிர்வாக ரீதியான அனுபவம் மிக குறைவாகவும், 90 சதவீதம் ’அகடமிக்’ ரீதியிலான அனுபவ விபரங்கள் இடம் பெற்றுள்ளன. தகுதி இருந்தும் உயர்கல்வி நெறியாண்மை குழுக்களில் (யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.சி.டி.இ.,) இடம் பெற்ற பங்களிப்பு குறித்த நிர்வாக ரீதியான விபரங்கள் குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 


இது யு.ஜி.சி., விதிக்கு மாறுபட்டது. இதை கருத்தில்கொண்டு திருத்திய ’பார்மேட்’ வெளியிட புதிய துணைவேந்தர் தேர்வுக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.