சி.பி.எஸ்.இ., சார்பில் கோவை மாவட்டத்தில், நேற்று நடந்த ’நெட்’ தகுதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு, போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலை, அரசுக் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியராக பணிபுரியவும், ஆராய்ச்சி படிப்பிற்கான உதவித்தொகையும் பெற, ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் இருமுறை தகுதி தேர்வு (நெட்) இரண்டு முறை நடத்தப்படுகிறது.
இத்தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. கோவை மாவட்டத்தில், அங்கப்பா பள்ளி, எஸ்.என்.ஆர் கல்லுாரி, ஜி.ஆர்.டி., கல்லுாரி உள்ளிட்ட, 17 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்உள்ளிட்ட, 80 பிரிவுகளின் கீழ் மாணவர்கள் தேர்வெழுதினர். மத்திய கல்வி வாரிய அதிகாரிகள், தேர்வு மையங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில், 17 மையங்களில், 10,800 பேர்தேர்வுகளில் பங்கேற்றனர். தேர்வு மையங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு மையங்களில் கீழ் தளத்தில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
ஆனால், இத்தேர்வில் பல்வேறு தேர்வு மையங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தளம், இரண்டாம் தளங்களில் தேர்வு அறை வழங்கப்பட்டதால் மிகுந்த சிரமப்பட்டனர்.
இதுகுறித்து, மாற்றுத்திறனாளி தேர்வர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ”தேர்வுக்கான முன்னேற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தேர்வர்கள் சந்தேகங்கள் கேட்டால் கூட பதிலளிக்ககண்காணிப்பாளர்களுக்குதெரியவில்லை.
”மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முன்யோசனையின்றி, முதல் தளத்திலும், இரண்டாம் தளத்திலும் தேர்வு அறைகளை அமைத்து அலைக்கழிப்புக்கு ஆளாக்கினர். ”பழையபடி, ’நெட்’ தகுதி தேர்வு, பல்கலை மானியக்குழுவிடம் ஒப்படைக்கவேண்டும்,” என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.