Pages

Monday, January 30, 2017

'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னுரிமை

''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தேர்வு வந்தாலும், 85 சதவீத, அரசு இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும்,'' என, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர் தெரிவித்தார்.  சென்னையில், 'தினமலர்' நடத்திய, 'நீட்' தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியில், சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் பேசியதாவது: 'நீட்' தேர்வில், கடந்த ஆண்டு விதிமுறைகளில், இந்த ஆண்டு மாற்றம் வர வாய்ப்புள்ளது. 15 ஆண்டு களாக, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை படிப்பு மட்டுமின்றி, முதுநிலை படிப்புக்கும், 'நீட்' தேர்வு உண்டு. கடந்த ஆண்டு முதல், இந்த நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த ஆண்டு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வு கட்டாயமாகும் என, தெரிகிறது. ஆனாலும், மாநில அரசின் இட ஒதுக்கீடுகளில் பெரிய அளவில் மாற்றம் வராது. மத்திய அரசின், 15 சதவீத இடங்களுக்கு, 'நீட்' மதிப்பெண்ணின் படி, அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 
மற்ற, 85 சதவீத மாநில இடங்களில், 'நீட்' தேர்வு மதிப்பெண் படி, அந்தந்த மாநில அரசுகளே, மாநில மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' வழங்கும். வெளிநாட்டு மாணவர் கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, 'நீட்' தேர்வு கிடையாது; மாணவர் சேர்க்கையும் கிடையாது. அதேபோல், வெளிநாடுகளில், 'நீட்' தேர்வு மையமும் கிடையாது.
'எய்ம்ஸ்' எனப்படும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர் எனப்படும், ஜவஹர்லால் நேரு மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தில் சேர, 'நீட்' மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது. அவற்றுக்கென தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. ஜிப்மர் தேர்வில், புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும், மதிப்பெண்ணில் சலுகை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். 
விதிமுறைகள் மாற வாய்ப்பு
வரும் ஆண்டில், 'நீட்' விதிமுறைகளில், மாற்றங்கள் வரலாம். பிப்., முதல் வாரத்தில், அதிகாரபூர்வமாக, 'நீட்' தேர்வு தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்வில், தவறான விடைகளுக்கு, நான்கில் ஒரு பங்கு மதிப்பெண், மைனஸ் மதிப்பெண்ணாக கழிக்கப்படும். அதேபோல், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண், கட்டாயம் வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்தினாலும், மத்திய அரசு அங்கீகரித்த, அனைத்து மாநில பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து தான், வினாத்தாள் அமைக்கப்படும். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், ஆடைகள், ஆபரணங்கள் அணிவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறினால், தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடைக்காது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.