Pages

Saturday, January 28, 2017

8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்வு

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினரின், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


பிளஸ் 2 வரை, இந்த உதவித் தொகை பெறுவதற்கு, மாநில அளவில், என்.எம்.எம்.எஸ்., என்ற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான தேர்வு, இன்று தமிழகம் முழுவதும், 542 மையங்களில் நடக்கிறது. இதில், 1.55 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். காலை, 9:00 மணிக்கு தேர்வு துவங்கும். மொத்தம் இரண்டு தாள்களுக்கு, மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.