Pages

Wednesday, January 4, 2017

ஜனாதிபதியின் ஒப்புதல், நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதுதான் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது அரசியல் சட்டத்தை வஞ்சிக்கும் செயல் சுப்ரீம் கோர்ட்டு 7 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு!!!

மத்திய அரசு, சில மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில், அவசர சட்டங்களை பிறப்பிக்கிறது. அச்சட்டம் காலாவதி ஆனவுடன் மீண்டும் பிறப்பிக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில், பீகாரில் ஆசிரியர் நியமனம் தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு, அவசர சட்டங்களுக்கு எதிராக நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வு, 6-க்கு 1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இத்தீர்ப்பை அளித்தது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:-

சட்டங்களுக்கு இருக்கும் அதே பலம், அவசர சட்டத்துக்கும் இருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் அவசர சட்டங்களை பாராளுமன்றம் அல்லது சட்டசபைகளின் பரிசீலனைக்கு வைப்பது கட்டாயம். அப்படி வைக்க தவறுவது, அரசியல் சட்டத்தை மீறுவதாகும்.

அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது, அரசியல் சட்டத்தை வஞ்சிக்கும் செயல். அப்படி மீண்டும் பிறப்பிப்பதற்கு ஜனாதிபதியோ, மாநில கவர்னரோ அளிக்கும் ஒப்புதல், நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தக்கூடியதுதான். அதற்கு விலக்கு கிடையாது.

மேலும், அவசர சட்டம் காலாவதி ஆனவுடன், அச்சட்டம் யார் பலனடைய பிறப்பிக்கப்பட்டதோ, அவர்களுக்கு எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் கிடைக்காது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.