Pages

Wednesday, January 18, 2017

45 வயதுக்கு குறைந்தால் பதவி இல்லை; பல்கலை நிபந்தனை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 2014 முதல், தனியார் கல்லுாரி பேராசிரியர் முகமது ஜாபர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். துணைவேந்தராக இருந்த, சந்திரகாந்தா ஜெயபாலனால் நியமிக்கப்பட்டவர். 


2016 செப்டம்பரில், புதிய துணைவேந்தராக, பாஸ்கரன் பதவியேற்றதும், முகமது ஜாபர் பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, நான்கு மாதங்களாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. 

பதிவாளர் விஜயனும், பின், பேராசிரியர் பாலசுப்பிரமணியனும், தேர்வு பொறுப்புகளை கவனித்து வந்தனர். இந்நிலையில், உயர் கல்வித்துறையின் அறிவுரைபடி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடத்தை நிரப்ப, பல்கலை நிர்வாகம், விளம்பரம் வெளியிட்டுள்ளது.


நிபந்தனை என்ன?

உதவி பேராசிரியராக, 15 ஆண்டுகள் அல்லது இணை பேராசிரியர்களாக, எட்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளோர், ஜன., 30க்குள் விண்ணப்பிக்கலாம்

இதற்கு, 45 வயதுக்கு குறைவானோர், விண்ணப்பிக்க முடியாது. ஆசிரியர் பணியில் இருந்தால், 57; நிர்வாக பணியில் இருந்தால், 55 வயதும் நிரம்பி இருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.