Pages

Monday, January 23, 2017

தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

tnusrbஇரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை-ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை-ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) பதவிகளுக்கான 15,711 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொதுத் தேர்வு-2017 தேர்வு குறியீட்டு எண், 1 விளம்பர எண், 117
காவல்துறை:
1. இரண்டாம் நிலை (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பொது ஆண்கள் - 4569, பெண்கள் - 46
2. இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை) பொது (ஆண்கள்) - 4627, பெண்கள் -3 3941
சிறைத்துறை:
இரண்டாம் நிலை சிறைக் காவலர் பொது ஆண்கள் - 976, பெண்கள் - 39+1
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை:
தீயணைப்போர் - 1512
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 24க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம் 170 செ.மீட்டர், மார்பளவு - சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீட்டரும், மூச்சடக்கிய நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீட்டர் மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.30. இதனை தெரிவு செய்யப்பட்டுள்ள 284 அஞ்சல் நிலையங்களில் செலுத்தி, விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம்: ரூ.135. இதனை அஞ்சலகத்தில் செலுத்தி, அதற்கான இரசீதைப் பெற்று, விவரங்கள் நிரப்பிய OMR விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.05.2017 அன்று காலை 9 மணிக்கு
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வு இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.