Pages

Monday, January 16, 2017

ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம்: பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதேபோல் நடப்பு கணக்கில் வாரம் ரூ.1 லட்சம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கடந்த நவம்பர் 8ம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10,000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது ரூ.4,500 எடுக்கலாம் என்ற வரம்பை ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வாரத்துக்கு மொத்தம் ரூ.24,000 தான் எடுக்கலாம் என்ற நிபந்தனையை மாற்றம் செய்யப்படவில்லை. இதேபோல் நடப்பு கணக்கில் வாரம் ரூ.1 லட்சம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. முன்பு நடப்பு கணக்கை பொறுத்தவரை ரூ.50,000 எடுக்கலாம் என்ற வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.