Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 31, 2016

    ஆசிரியர்கள் கூட்டமைப்பு மறியல் போராட்டம்

    15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வேலூரில் மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

    தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில், மாநில முன்னாள் தலைவர் சாம்சன், இளங்கோவன், மாநில முன்னாள் துணைத் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    "ஜாக்டோ' சார்பில் மறியல் போராட்டம்: 1,154 ஆசிரியர்கள் கைது

    ஆசிரியர் சங்கங்களின் கூட்டியக்கக் கூழு (ஜாக்டோ) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,154 பேரை போலீஸார் கைது செய்தனர். ஜாக்டோ அமைப்பு சார்பில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ அமைப்பினர் திருவள்ளூர் -திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு வங்கியின் துணை விதி மற்றும் அரசு விதிகளின்படியும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம்  தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல் பெற்று பணி நியமனம் செய்யப்பட உள்ளது.  மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும்

    கீழ்க்காணும் தகுதிகள் பெற்ற மற்றும் கீழ்க்கண்ட இனத்துக்குரிய முன்னுரிமை/முன்னுரிமையற்ற பிரிவை சேர்ந்த இந்தியக் குடியுரிமையுடைய ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15/02/2016 பிற்பகல் 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான உறுப்பினர்கள் அறிவிப்பு

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) நிர்வாகக் குழுவுக்கு 11 பேர் புதிய உறுப்பினர்களை ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்.

    புதிய உறுப்பினர்களின் பட்டியல் விவரம்:

    1. பிரதாப் குமார்

    2. சுப்பையா

    3. முத்துராஜ்

    தந்தி டிவி விவாதம் சரியா? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் முருகனின் குற்றச்சாட்டு முறையா??????

    ஜாக்டோ போராட்டம் பற்றி நேற்று தந்தி டிவியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பல அர்த்தமற்ற கருத்துக்களை கூறிச் சென்றுள்ளார் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி திரு.முருகன் அவர்கள். அவருக்கு சில கேள்விகளும் அவரது கருத்துகளுக்கு சில பதில்களும் இங்கே....

    10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் திருச்சி மத்திய சிறையின் 67 கைதிகள்

    திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளில், 67 பேர், நடப்பாண்டு, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.தமிழகத்தில் சென்னை புழல், வேலுார், சேலம், கடலுார், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறையில், விசாரணை மற்றும் தண்டனை கைதிகள், 20,000 பேர் அடைக்கப் பட்டுள்ளனர்.

    சிலிண்டர் சப்ளையில் கமிஷனுக்கு 'குட்பை': மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

    சமையல் காஸ் சிலிண்டருக்கு, இணைய தளம் மூலம் பணம் செலுத்தும் திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் ஏஜன்சிகள் மூலம், வீடுகளுக்கு, சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்கின்றன. ஏஜன்சி ஊழியர்கள், சிலிண்டருக்கு, பில் தொகையுடன், 50 ரூபாய் வரை கமிஷன் கேட்கின்றனர்.

    கே.வி.பள்ளிகளில் 'எம்.பி. கோட்டா' சேர்க்கை 10 ஆக உயர்வு

    கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.,க்கள் ஒதுக்கீடு, ஆறு இடங்களில் இருந்து, 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பி.,யும்., ஆறு மாணவர்களை சிபாரிசின் படி, கே.வி., பள்ளிகளில் சேர்க்க முடியும். இந்த ஒதுக்கீடு, வரும் கல்வி ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 10 மாணவர்களை எம்.பி.,க்கள் சிபாரிசு செய்யலாம். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை, சி.பி.எஸ்.இ., இயக்குனர் சந்தோஷ் குமார் மல் பிறப்பித்துள்ளார். மேலும், ஒதுக்கீட்டில் சில திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

    Saturday, January 30, 2016

    கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து ஜாக்டோ போராட்டம் தொடக்கம் பிப்.1 பள்ளிகள் இயங்காது

    ஜாக்டோ அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனமாக இருக்கும் தமிழக அரசை கண்டித்து, இன்று தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி வரை தொடர் மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ அமைப்பில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், கடந்த நான்கரை ஆண்டுகளாக  இடைநிலை ஆசிரியர் உட்பட அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் படிகள் உட்பட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 

    CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட Data Centre ஆணையாளர், நிதித்துறை முதன்மைச்செயலாளரை கோரியுள்ளார்.

    7வது ஊதியக்குழுவினை அமுல்படுத்த அமைக்கப்பட்ட உறுப்பினர்கள் முதல் கூட்டம் கூடுகிறது!

    Nodal officers of different ministries and departments will hold first meeting on February 2 to formulate action points for processing 7th Pay Commission recommendations that have bearing on remuneration of about 1 crore central government employees and pensioners.

    An Empowered Committee of Secretaries, headed by Cabinet Secretary P K Sinha, has been set up to process the panel's recommendations that would put an additional burden of Rs 1.02 lakh crore on the exchequer.

    மக்கள் தொகை பதிவேட்டுப் பணி : ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி வழக்கு

    ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:

    தேர்தல் பணியில் இருந்து விதிவிலக்கு தேர்தல் அதிகாரியிடம் 'ஜாக்டா' மனு

    'வயது முதிர்வு மற்றும் நோய்வாய்பட்டவர்களுக்கு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டா' சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:

    டி.என்.பி.எஸ்.சி : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER) அட்டவணை வெளியீடு

    ஆசிரியர் பயிற்சி: பிப்., 1ல் சான்றிதழ்

    டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பிப்., 1ல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தொடக்க கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று,

    வி.ஏ.ஓ., தேர்வு இருப்பதோ 800; 10 லட்சம் பேர் போட்டி

    டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங் களுக்கு, பிப்., 28ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், சரியான முறையில் விவரங்கள் அளித்து,

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு

    'தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கு, இந்த ஆண்டில் தேர்வுகள் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு அட்ட வணையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி நேற்று வெளியிட்டார். இந்த அட்டவணைப்படி இந்த ஆண்டில், மொத்தம், 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, 35 தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், 23 தேர்வுகள் மூலம், 5,513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    புதிய கல்வி திட்டங்களுக்காக யு.ஜி.சி., ரூ.31.27 கோடி ஒதுக்கீடு : பட்டமளிப்பு விழாவில் தகவல்

    'புதிய கல்வி திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.31.27 கோடியை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) ஒதுக்கியுள்ளது' என, காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் தெரிவிக்கப்பட்டது.காந்தி கிராம பல்கலையின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. டில்லி கட்டடக்கலை குழும தலைவர் உதய்சந்திரகாந்த் கட்காரி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். பல்கலை வேந்தர் ரெனானா ஜாப்வாலா தலைமை வகித்து பேசுகையில், “கல்வியை பாடங்களாக படித்தீர்கள். பட்டம் பெற்றபின் நீங்கள், அமைதி வழியில் சமூகத்தை மேம்படுத்த உறுதி கொள்ள வேண்டும்” என்றார்.

    பிளஸ் 2 தேர்வுக்கு அனுமதிச் சீட்டு: தனித் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

    மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் சனிக்கிழமை (ஜனவரி 30) முதல் பிப்ரவரி 1 வரை தேர்வறை அனுமதிச் சீட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

    Friday, January 29, 2016

    மக்கள் தொகை கணக்கு ஆசிரியர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 வரை அனுமதி

    ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை

    'இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர்.

    'சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு தமிழக அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்க முடியாது' உச்சநீதிமன்றம் உத்தரவு

     'தமிழக அரசின், பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால், அவை, தங்களுக்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 'தமிழக அரசின் பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்' என, சென்னை ஐகோர்ட், தீர்ப்பு வழங்கியிருந்தது.இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    பாட வாரியாக ஆசிரியர்கள் விபரம்

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, பாடவாரியாக உள்ள ஆசிரியர்களின் விபரங்களை ஜன.,27 முதல் ஜன.,29 மாலை 5 மணிக்குள் www.tn.dge.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளித் தலைமையாசியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நிதி நெருக்கடியில் தள்ளாடுது அரசு; அரசு பணியாளர் சங்கம் குற்றச்சாட்டு

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது: அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த முதல்வர், ஐந்து ஆண்டுகளில், எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, தினம் ஒரு நகரம் என, சென்னை, திருச்சி, மதுரையில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

    100 சதவீதம் தபால் ஓட்டு: தேர்தல் அதிகாரி அறிவுரை

    'தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுரை வழங்கினார்.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளதால், சென்னை மண்டலத்திற்குட்பட்ட, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நேற்று நடந்தது.

    ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளை...கவனமா கையாளுங்க! ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

    "பள்ளிகளில், குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்; பள்ளிதோறும், ஆலோசனை கமிட்டி ஏற்படுத்த வேண்டும்' என, திருப்பூரில் நடந்த, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.

    கற்றல் அடைவுத் திறன் குறித்து அதிகாரிகள் ஆய்வு

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

    குரூப் - 2 ஏ தேர்வு விடைகள் வெளியீடு

    தமிழக அரசு துறையில் குரூப் - 2 ஏ மூலம் நிரப்பப்படும் நேர்முகத் தேர்வு அல்லாத 1,947 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, ஜன., 24ம் தேதி நடந்தது; எட்டு லட்சம் பேர் எழுதினர்.இந்த தேர்வில், பொது தமிழ், பொது ஆங்கிலம் மற்றும் பொது கல்வி ஆகியவற்றுக்கு, தலா, 300 மதிப்பெண் என, மூன்று தாள்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான விடைகளை, அரசு பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.

    பிளஸ் 2 பொதுத் தேர்வு: 42,748 பேர் எழுதுகின்றனர்

    வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 42,748 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வை 52,353 பேரும் எழுதவுள்ளனர். மாநிலம் முழுவதிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரையும் நடைபெறுமென கல்வித் துறை அட்டவணை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை வேலூர் கல்வி மாவட்டத்தில் 21,610 மாணவ, மாணவிகளும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 21,138 பேரும் என மாவட்டம் முழுவதிலும் 42,748 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதிலும் 145 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அரசு தேர்வுகள் துறை - மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

    பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்

    ஆசிரியர்கள், பெற்றோர் நிலையிலிருந்து பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று ஆட்சியர் ச.ஜெயந்தி பேசினார்.

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர், குமார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    Thursday, January 28, 2016

    திட்டமிட்டபடி ஜாக்டோ மறியல் போராட்டம் ஜனவரி 30 ல் தொடங்கட்டும்.

    ஜனவரி 30,31 பள்ளி விடுமுறை நாட்களாகும். அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையே. இந்த சூழ்நிலையில் ஜாக்டோ மாநில அமைப்பு எடுத்துள்ள முடிவினை செயல்படுத்தும் வகையில் சடங்கு போன்று இந்த மறியல் போராட்டத்தை நடத்துகின்றோம். கலந்துகொள்பவர்கள் மீது சட்ட ரீதியாகவும் விதிகளின்படியும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

    SSLC - ENGLISH MINI GUIDE & PRACTICE BOOK

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாடு கோவில்பட்டியில் பிப்ரவரி 5,6,7ல் நடைபெறவுள்ளது


    இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் நாளை காலை 11.30 முதல் 11.32 வரை 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த அரசு உத்தரவு

    அகஇ - ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு 01.02.2016 அன்று பள்ளிகளை நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


    அம்மாவை வணங்குங்கள்!! அரசை ஆதரியுங்கள்!!!

    பகுதிநேர ஆசிரியர்கள்  நியமன ஆணை உரிமை கோர முடியாத வகையில் உள்ளதை உணர்ந்து பணிபுரியுங்கள். அரசாணையில் உள்ளபடி அருகிலுள்ள பள்ளிகளில் பணி நியமனம், மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில் ஊதியம்,  ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதலாக பணிபுரியும் வாய்ப்பு போன்றவைகளே  இந்த நான்காண்டுகளாக  கோரிக்கை மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்ந்து கேட்டும் இதுவரை பெறமுடியாமல் உள்ளோம் என்பதை உணர்ந்து பணிபுரியுங்கள்.

    ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம்; ’ஜாக்டோ’ கூட்டத்தில் முடிவு

    போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக, இரண்டு நாட்கள் ஆசிரியர் சந்திப்பு இயக்கம் நடத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ’ஹால் டிக்கெட்’ மற்றும் ’தட்கல்’ விண்ணப்பம்!

    மேல்நிலை பொது தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் ’சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ்’ விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை, அரசு தேர்வர்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

    மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்குமா?

    கனமழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    காதலித்தால் வேலை இல்லை; பட்டதாரிகளுக்கு சோதனை!

    காதல் திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை என, தனியார் கல்வி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளன. காதல் விவகாரங்களால், மாணவ, மாணவியர் பாதிக்கக் கூடாது; பள்ளிக்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக, பல தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன. மாணவ, மாணவியருக்கு ஒழுக்கம், குருகுல கல்வி முறை, கண்டிப்பான விதிகளை போதித்து, முறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளன.

    பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

    5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் மறியல் செய்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு


    தேனி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் மற்றும் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதற்கு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    சிவகாசியில் ஜன.31 இல் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி

    சிவகாசி ரத்தனம் செஸ் அகாதெமி சார்பில் விருதுநகர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சதுரங்கப் போட்டி சிவகாசியில் ஜன.31 ஆம் தேதி நடைபெற உள்ளது என அந்த அமைப்பின் தலைவர் வி.சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    பி.எப்., தொகை கணக்கு வைக்காதது கிரிமினல் குற்றம்: அதிகாரி எச்சரிக்கை

    ''பி.எப்., தொகையை, முறையாக கணக்கு வைக்காமல் இருப்பது, கிரிமினல் குற்றம்,'' என, பி.எப்., கோவை மண்டல உதவி கமிஷனர் ரவிதேஜாகுமார் ரெட்டி எச்சரித்து உள்ளார். ஊட்டியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு, 'யு.ஏ.என்.,' எனப்படும், நிரந்தர வைப்பு எண் சேவை பயனுள்ளதாக இருக்கும். அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பி.எப்., நிதியை, முறையாக கணக்கு வைப்பதில்லை என்ற சர்ச்சை இருந்து வருகிறது.

    சென்னையில் இன்று தேர்தல் பயிற்சி வகுப்பு

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான, தேர்தல் ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, சென்னையில் இன்று நடைபெறுகிறது.
    தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுடனான ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்பு, தலா, எட்டு மாவட்டங்கள் வீதம், நான்கு கட்டமாக நடத்தப்படுகிறது.

    புதிய அரசாணை அரசு வெளியிட வேண்டுகோள்!!! அரசின் திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் சிக்கித்தவிக்கும் 15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி?

    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனைகளில் ஒன்றாக 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணைப்படி அரசுப்பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளான 6 முதல் 8 வரையிலான வகுப்புமாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்விமற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளான கணினி, இசை, தையல், தோட்டக்கலை,கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.

    ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர்

    பொது இடங்களில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க “புன்னகையை தேடி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் 7.2.2016 அன்று பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மாபெரும் உண்ணா நிலை போராட்டம்.

    கணினிக் கல்வியை ஆரம்ப கல்வி முதல் கட்டாயப் பாடமாக அரசு பள்ளியில்
    கொண்டுவர-கோரி.
    ஞாயிறு காலை
    9.36 லிருந்து மாலை 5மணி வரை.
    சேலம் மாவட்டம்.
    கலெக்டர் அலுவலகம் அருகில் .
    உண்ணாநிலை போராட்டம்.

    தலைமை ஆசிரியர்கள் உதவி ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

    ஜாக்டோ போராட்டத்தின் 15 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் 3 நாட்கள் மறியல் போராட்டத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தினையும் திரட்டி மறியல் களத்தில் இறக்கிட வேண்டும்.27.01.2016 முதல் 29.01.2016 முடிய நடைபெறவுள்ள ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம் ஆசிரியர்கள் மத்தியில் உணர்வு தீயினை உருவாக்க வேண்டும்.

    Wednesday, January 27, 2016

    ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

    ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம் குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

    'பேஸ்புக் - வாட்ஸ் ஆப்' ஜோடி வாடிக்கையாளருக்கு வசதிகள்

    தகவல் அனுப்ப உதவும், 'ஆப்'களால் எழுந்துள்ள கடும் போட்டியை சமாளிக்க, முன்னணி சமூக வலைதளமான, 'பேஸ்புக்' உடன் இணைந்து, தகவல்கள், ஆவணங்கள் பரிமாற்றம், 'வீடியோ' அழைப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளை, 'வாட்ஸ் ஆப்' ஏற்படுத்தித் தந்துள்ளது. மொபைல் போனில் தகவல் அனுப்ப உதவும், 'வாட்ஸ் ஆப்'புக்கு போட்டியாக, 'லைன், வைபர், மெஸேஜ்மீ, வாக்ஸர், ஹேடெல், டெக்ஸ்ட்நவ், டாக்கடோன், கீக்' என, ஏராளமான, 'ஆப்'கள், மக்களிடையே பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில், வாட்ஸ் ஆப் முன்னணியில் உள்ளது.

    13 மாதங்களாக சம்பளம் இல்லை துப்புரவு பணியாளர்கள் பரிதவிப்பு

    தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, கடந்த, 13 மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய அடிப்படையில், நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாதம், 25 ரூபாய் சம்பளத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்.

    மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு

    இலங்கையில் மாணவர்களுக்கான அழுத்தங்களை குறைக்கும் வகையில் கல்வியில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோரும் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் 6 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பாடங்களின் எண்ணிக்கை குறித்த அழுத்தங்கள் பற்றி கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு பணி?

    பள்ளிகளில் உடற்பயிற்சி அளிப்பது, தேசத்துக்காக தியாகம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    "தாய்மொழி வழிக் கல்வியே புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும்"

    தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே புதுமையான சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்க முடியும் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் கூறினார். தமிழ் இலக்கியப் பாசறை மற்றும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச் சங்கம் சார்பில் "கலாமைப் பாடிய கவிக் குயில்கள்' நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஆர்.எஸ். புரம் அன்னபூர்ணா கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன!!!

    செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன. ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.

    பிப்ரவரி 1 முதல் அதிரடி நடவடிக்கைரயிலில் மூத்த குடிமகன் சலுகைக்காக தவறான வயது குறிப்பிட்டால் அபராதம்: ரயில்வே அறிவிப்பு

    ரயிலில் மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணிப்பவர்கள் தவறான வயதை குறிப்பிட்டு பயணித்தால், பயணச்சீட்டு இன்றி பயணிப்பதாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய கெடுபிடி பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலாகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.

    Tuesday, January 26, 2016

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விரைவில் அட்டவணை வெளியீடு

    2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.

    தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2016ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பாக அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் விவரம் 31.12.2008 வரை கோருதல் சார்பான உத்தரவு

    10ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் பாடத்திற்கு 'விலக்கு'

    'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக பள்ளிகளில், தமிழ் மொழியை கட்டாயமாக்கி, 2006ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, 2006ல், 1ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, அடுத்த அடுத்த ஆண்டுகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டது.

    'ராகிங்' தடுப்பு கமிட்டி கல்லூரிகளுக்கு உத்தரவு

    'ராகிங் மற்றும் பாலியல் கொடுமை உட்பட, கல்லுாரி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தடுக்க, ஐந்து வகையான கமிட்டிகளை கட்டாயம் அமைக்க வேண்டும்' என, இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நிபந்தனை விதித்துள்ளது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் கட்டுப்பாட்டில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கு அங்கீகாரம் பெற, பிப்., 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டு உள்ளது.

    வாக்காளர் கையேடு வெளியிட்டது கமிஷன்

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம், எப்படி வாக்களிப்பது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அடங்கிய வாக்காளர் கையேட்டை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு இந்த கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது.
    கையேட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:
    * தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி இணைய தளத்தில் சரி பார்க்கவும்
    * ஓட்டு போட, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் போதாது; உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும்.

    டி.இ.ஓ.,க்கள் பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு

    தமிழகத்தில் பதவி உயர்வு மூலம் பணியேற்ற மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,க்கள்) நிர்வாக பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை நேற்று ஒத்திவைத்தது. இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி ஜன.,27 முதல் 29 வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி பிப்., 1 முதல் 3 வரையும் சென்னையில் நடப்பதாக இயக்குனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    'பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது'

    புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது; அதன் முக்கிய அம்சங்கள்:
    * காலை, 7:30 மணி முதல், மாலை, 7:30 மணி வரை, 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
    * வெளிநாட்டு மொழிகளுக்குபதிலாக, சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும்.

    குடியரசு தினம் என்றால் என்ன? ஒரு பார்வை

    இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.

    Monday, January 25, 2016

    TNPSC - GROUP-IIA ANSWER KEYS

    'ஆல் பாஸ்' திட்டம் மாநிலங்களுக்கு கெடு

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்காமல், அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்ய வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது. இந்த திட்டப்படி, 'அனைவருக்கும் கட்டாயமாக பள்ளிக்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம், சரியாக நிறைவேறவில்லை' என்ற, புகார் எழுந்தது.

    சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்

    தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி, 2013ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படுகிறது.

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விரைவில் அட்டவணை

    'ஆண்டு தேர்வு அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள, 1947, 'குரூப் 2 - ஏ' இடங்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2,087 மையங்களில் நேற்று நடந்தது. 

    தீவிரமாக ஆராய்கிறது பதிவுத்துறை எந்த ஊரில் இருந்தும் பத்திரப்பதிவு சாத்தியமா?

    சொத்து அமைந்துள்ள பகுதிக்கு செல்லாமல், எந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்தும், பத்திரப்பதிவு செய்யும், புதிய வசதிக்கான சாத்தியக் கூறுகளை பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும், சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. குறைந்துள்ளது.

    ஆசிரியர் குடும்பத்திற்கு பணப்பலன் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டனர், இவர்களின் குடும்பத்திற்கு பணப்பலன் வழங்கவில்லை. தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்க மாநில தலைவர் தியாகராஜன் காளையார்கோவிலில் கூறியதாவது:மத்திய அரசு நாடு முழுவதும் ஓய்வூதிய திட்டத்தை கை விட்டு,'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' செயல்படுத்த வலியுறுத்தியது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முதலில் 2004ல் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை செயல்படுத்தினார். பங்களிப்பு திட்டத்தை கைவிடக்கோரி வலியுறுத்தி வருகிறோம். 2006--11ல் செயல்பட்ட தி.மு.க.,அரசும் கண்டுகொள்ளவில்லை.

    போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை

    போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மடத்துக்குளம் வட்டம், கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, செங்கண்டிபுதூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இதில், ராமசாமி கொழுமத்திலும், சிவராஜ் துங்காவியிலும் கிராம நிர்வாக அலுவலர்களாக கடந்த 1999-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர்.

    30 முதல் ஆசிரியர்கள் தொடர் மறியல்

    வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜேக்டோ அறிவித்துள்ளது. கோவை தாமஸ் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜேக்டோ மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை, ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்புக்கென தனிச் சட்டம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சிவானந்தா காலனியில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

    Sunday, January 24, 2016

    CPS இல் மேலும் ஒரு வழக்கு வெற்றி

    திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக CPS இல் பணியாற்றி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளாகியும் எவ்விதமான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.

    சென்னை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் சந்திப்பு

    சென்னை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜோஸ்வா ஜான்சன் அவர்களை மரியாதை நிமித்தமாக, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார், சென்னை மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் சந்திந்து புத்தாண்டு மற்றும் பொங்கல்

    பள்ளிக்கல்வி - எஸ்.எஸ்.ஏ., பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

    தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு - ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    வெளிநாடு செல்ல அனுமதி அவசியம்:தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

    'அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, இயக்குனரின் அனுமதியை பெற வேண்டும்' என, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பும் முன், தகவல் படிவத்தை நிரப்பி, உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இன்ஜி., படிக்க புதிய திறன் தேர்வு;மத்திய அரசு அடுத்த அதிரடி

    தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைகளில் சேர, நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.எம்.எஸ்., - ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும்.

    பள்ளிக்கல்வி, உயர்கல்வியில் தமிழகம் முதலிடம் சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா

    பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் தமிழகம் முதலிடத்தை பெற்றிருப்பதாக தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை.

    சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்கணக்கெடுக்க அரசு உத்தரவு

    பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு, 2015-16ம் கல்வியாண்டில் அரசு பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் விவரத்தை சேகரித்து அனுப்ப, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்பெண் டாக்டர்கள் அதிக தேர்ச்சி

    இந்திய மருத்துவ துறையில், அரசு உதவி மருத்துவ அதிகாரி பணியிடத்துக்கான மதிப்பெண் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. இதில், பெண் டாக்டர்கள் அதிகளவில் தேர்வாகி உள்ளனர்.

    பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிக்கல்

    பகுதிநேர பணியிடத்தை குறைக்கும் நடவடிக்கையில், கல்வித்துறை இறங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத்தர, 16 ஆயிரத்து, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.

    சான்றிதழுக்கு ரூ.6 லட்சம்: போலி பேராசிரியரை தப்பவிட்ட நிர்வாகம்

    நாமக்கல், அரசு கல்லுாரியில், உதவி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி., போலி சான்றிதழ் கொடுத்த பேராசிரியரை, கல்லுாரி நிர்வாகம் தப்பவிட்டதும் தெரியவந்துள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், 2011ம் ஆண்டு தாவரவியல் உதவி பேராசிரியராக, நீலகிரி மாவட்டம், குன்னுாரைச் சேர்ந்த ஜோஸ்பீன் கமோலியா சேர்ந்தார். இவரது, பிஎச்.டி., சான்றிதழின் உண்மை தன்மை அறியும் பொருட்டு, சம்பந்தப்பட்ட, பீஹார் வீர் குன்வார் சிங் பல்கலைக்கு அனுப்பப்பட்டது.

    டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 1மெயின் தேர்வு முடிவு தாமதம்

    தமிழகத்தில் குரூப்- 1 மெயின் தேர்வு முடிந்து ஆறுமாதமாகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால் எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல் நிலை தேர்வு கடந்த ஓராண்டுக்கு முன் நடந்தது. டி.எஸ்.பி., டி.இ.ஓ., சப் கலெக்டர், வணிகவரித்துறை ஆணையர், நகராட்சி கமிஷனர் உட்பட பல பதவிகளில், 79 காலியிடங்களுக்கான தேர்வு நடந்தது.

    துணைவேந்தர்கள் இன்றி 8 பல்கலைகளின் பணி முடக்கம்

    பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பதில், புதியவர்கள் நியமிக்கப்படாததால், எட்டு பல்கலைகளில், துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், 22 பல்கலைகள் உள்ளன. இவற்றில் வேளாண், மருத்துவம், சட்டம், கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் உடற்கல்வி பல்கலைகளும் அடங்கும். திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளியும் பல்கலை அந்தஸ்தில் உள்ளது.

    இரு ஆண்டுக்கும் சேர்த்து இலவச 'லேப் - டாப்'

    தமிழக அரசின் இலவச லேப் - டாப் கிடைக்காதவர்களுக்கு கொடுப்பதற் காக, தமிழ்நாடு மின்னணு கழகம் எனும், 'எல்காட்' நிறுவனத்தினர், 2014 - 15 மற்றும் 2015 - 16 கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து, 10.5 லட்சம் லேப் - டாப்களை கொள்முதல் செய்துள்ளனர். இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரு கல்வியாண்டுக்கும் சேர்த்து தர வேண்டிய லேப் - டாப்கள் அனைத்தும், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி முடிவடைந்தது.

    Saturday, January 23, 2016

    விழி இழந்தாலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை!

    விழி இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறார் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை வள்ளி. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் வள்ளி,34. 5 வயதுவரை சக பெண் குழந்தைகளுடன் ஓடி, சாடி விளையாடிய வள்ளியை திடீரென்று அம்மை நோய் தாக்கியது. 

    கவுரவ பேராசிரியர்கள் பணி நிரந்தரமில்லை!!

    கவுரவ பேராசிரியர்கள் பணி நிரந்தரமில்லை' காலியாக உள்ள கல்லுாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார். சட்டசபையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:

    பள்ளி கழிப்பறை பராமரிப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு:இம்மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க முடிவு!

    அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை துப்புரவு செய்து பராமரிக்கும் பொறுப்பை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள், புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 857 தொடக்கப் பள்ளிகள்; 321 நடுநிலைப் பள்ளிகள்; 122 உயர்நிலைப் பள்ளிகள்; 131 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,431 பள்ளிகள் உள்ளன.

    2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு 9% வட்டி!!!

    இ.பி.எப்.ஓ., எனப்படும், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 9 சதவீத வட்டி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இ.பி.எப்.ஓ., அறக்கட்டளை நிர்வாகியும், பாரதிய தொழிலாளர் சங்க செயலருமான பானுசுரே, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

    வெறும் அறிவிப்போடு நின்றது சிறப்பாசிரியர்கள் நியமனம் : மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்

    சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

    7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்'

    பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்மார்ட் மாணவியை மென்டலாக்கிய அதிகாரிகள்..!

    திருச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவரது விடைத்தாளில் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடிக்காக, மாணவியை மெண்டலாக்கிய கல்வித் துறை அதிகாரிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. திருச்சி, துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். நெசவுத் தொழிலாளி. இவர் மகள் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). துறையூரில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நன்றாக படித்தார்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Friday, January 22, 2016

    வாசிப்பை வளர்க்க ’வாசித்தலே எல்லை’!

    உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், வாசித்தலே எல்லை என்ற தலைப்பின் கீழ், அறிவிக்கப்பட்ட போட்டிக்கான ஆய்வு, நேற்று துவங்கியது. அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், வாசித்தலே எல்லை என்ற தலைப்பில், இப்போட்டி தமிழக கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளிலுள்ள, 4 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் வாசிப்பு திறன் அளவிடப்படுகிறது.

    ஆசிரியர்களுக்குள் அடிதடியால் கல்வி பாதிப்பு!

    ஆசிரியர்கள் சண்டையால், கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, பெற்றோருடன், மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக, சூரியசெல்வி மற்றும், 10 ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு ஆய்வக உதவியாளர் என, 13 பேர் உள்ளனர். 286 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

    பள்ளிக் கல்வி முடிக்கும் மாற்றுத்திறனாளிகள் 9 சதவீதம்!

    நாட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளில் 9 சதவீதம் பேரே பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர் என, காந்தி கிராம பல்கலை மனையியல்துறை தேசிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. 

    டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1மெயின் தேர்வு முடிவு தாமதம்

    தமிழகத்தில் குரூப்-1 மெயின் தேர்வு முடிந்து ஆறுமாதமாகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால் எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல் நிலை தேர்வு கடந்த ஓராண்டுக்கு முன்பு நடந்தது. டி.எஸ்.பி., டி.இ.ஓ., சப்கலெக்டர், வணிகவரித்துறை ஆணையர், நகராட்சி கமிஷனர் உட்பட பல பதவிகளுக்கு 79 காலியிடங்களுக்கான தேர்வாக நடந்தது.

    ஆசிரியர்கள் நியமனம் பட்டியல் வெளியீடு!

    மாநிலத்தின் துவக்க, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, 9,511 பேர் கொண்ட பட்டியல், இன்று அறிவிக்கப்படும், என, துவக்க கல்வி துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார். பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

    ஆசிரியரா, பேராசிரியரா: பட்டதாரிகள் குழப்பம்?

    மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், 'சிசெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது.

    வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்

    ''அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்ட, தமிழக அரசு தேவையான கடன் வழங்கியதால், வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: மார்க்சிஸ்ட் - டில்லிபாபு: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, வாடகை குடியிருப்பு கட்டிக் கொடுக்க அரசு முன்வருமா?வைத்திலிங்கம்: ஆறாவது ஊதியக் குழு மூலம் கிடைத்த சம்பள உயர்வு மற்றும் தமிழக அரசு வழங்கிய வீட்டுக்கடன் ஆகியவற்றால்,

    பாரதியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

    கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ், அனைத்து பிரிவு முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    'நெட்' தேர்வில் யோகா பாடம் சேர்ப்பு

    தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, சென்னை ராஜ்பவனில் நேற்று நடந்தது. இதில், 161 மாணவ, மாணவியருக்கு, கவர்னர் ரோசய்யா பட்டங்களை வழங்கினார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 257 சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடம்: ஜன. 29 வரை விண்ணப்பிக்கலாம்

    திண்டுக்கல் மாவட்ட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 257 அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு ஜன. 29ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதெடார்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி:

    மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) தொடர்பாக த.அ.உ.சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்வி

    விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் குருப் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் (Aeronautical Quality Assurance) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க், ஓட்டுநர் உள்ளிட்ட 80 குருப்‘சி’ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும் ஓர் அளவு கோலா?

    சி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்

    பள்ளிக் கல்வித் துறையில், 57 உயர் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பொதுத் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு தடை

    'தனியார் நிறுவனம் நடத்தும் நடைபயண நிகழ்ச்சிகளில், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை' என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். 

    Thursday, January 21, 2016

    CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTRE ஆணையாளர் கேட்டுள்ளார்!!!

    CPS தொடர்பான அனைத்து அரசாணைகளும் நிதித்துறை மூலம் வெளியிடப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத்துறை வாயிலாக செயல்படுகிறது.

    தேர்வுத்துறையின் அலட்சியப் போக்கின் காரணமாகவே, போலி ஆசிரியர்கள் !

    ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுத்துறையின் அலட்சியப் போக்கின் காரணமாகவே, போலி ஆசிரியர்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில் போலி சான்றிதழ் தயாரித்து, அரசு பணியில்சேர்த்துவிடும் இடைத்தரகர் கும்பல் போலீசில் சிக்கியது. இதில், ஏராளமான 
    ஆசிரியர்கள் போலி சான்றிதழ் தயாரித்து பணியில் சேர்ந்துள்ள விவரம் வெளியானது.

    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் பணி

    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி எனப்படும் டி.எம்.பி வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளரிக்கல் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் வெளியீடு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான, மூன்றாம் கட்ட நியமனத்துக்கு, 2015 ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, பிப்.,1ல் நடக்கிறது.

    உண்மை தன்மை கண்டறிவதில் அலட்சியம்

    ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுத்துறையின் அலட்சியப் போக்கின் காரணமாகவே, போலி ஆசிரியர்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில் போலி சான்றிதழ் தயாரித்து, அரசு பணியில் சேர்த்துவிடும் இடைத்தரகர் கும்பல் போலீசில் சிக்கியது. இதில், ஏராளமான ஆசிரியர்கள் போலி சான்றிதழ் தயாரித்து பணியில் சேர்ந்துள்ள விவரம் வெளியானது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது. 

    அரையாண்டு பொதுத் தேர்வு - ஜனவரி 2016 - விடைக் குறிப்புகள்

    படிப்பை மட்டும் கொடுங்கள் - தலையங்கம்

    எத்தனை கனவுகள்! ஆசைகள்! பிஞ்சு கரம்பிடித்து பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்த்த முதல் நாளிலேயே பெற்றோர்கள் கனவு கோட்டை கட்டி விடுகிறார்கள்.அந்த கோட்டையில் ராஜாவாக, ராணியாக, மந்திரியாக, உயர்ந்த பதவி வகிக்கும் அதிகாரியாக... இன்னும் இப்படி பலபல தோற்றங்களில் அந்த பிள்ளைகள் வலம் வருவது போல் கனவு காண்கிறார்கள்.தங்கள் சுகங்களையும், வேதனைகளையும் தியாகம் செய்து பிள்ளைகளின் சந்தோஷத்தை மட்டுமே தங்கள் சந்தோஷமாக தாங்கி வாழ்கிறார்கள்.

    பல்கலைக்கழகங்களில் யோகா படிப்புகள்: ஆய்வுக் குழு அமைப்பு

    நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில், யோகா சார்ந்த கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளையும், நிகழ்ச்சிகளையும் நிறுவுவது தொடர்பாக, பெங்களூரில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஹெச்.ஆர்.நாகேந்திரா தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

    அரசு பள்ளிகளில் எழுத்தர் பணிக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணி அமர்த்தலாம்

    அரசு பள்ளிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கு, ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு எழுத்தர்களை ஓராண்டுக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தலாம் என்று மாநில கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் மாநில அரசின் கீழ் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளதாகவும், அந்த பணிகளை கூடுதலாக ஆசிரியர்களே கவனிக்கும் நெருக்கடியும் இருப்பதாக புகார் எழுந்தது.

    9 மாவட்ட ஆட்சியர் மாறுதல்

    புதிய வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் காணலாம்

    வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். தமிழகத்தில் இன்று வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.வாக்குச்சாவடிகள், மாநகராட்சி அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் இந்த இறுதிப் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

    பத்தாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு அட்டவணை

    Wednesday, January 20, 2016

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: (அடைப்புக்குள் தற்போது வகித்து வரும் பதவி)

    கரூர் ஆட்சியராக டி.பி. ராஜேஷ் (கிருஷ்ணகிரி ஆட்சியர்) கிருஷ்ணகிரி ஆட்சியராக சி. கதிரவன் (மதுரை மாநகராட்சி ஆணையர்) பெரம்பலூர் ஆட்சியராக கே.நந்தகுமார் (ராமநாதபுரம் ஆட்சியர்) திருப்பூர் ஆட்சியராக ஜெயந்தி (கரூர் ஆட்சியர்) மதுரை ஆட்சியராக கே. வீரராக ராவ்( திருவள்ளூர் ஆட்சியர்) சென்னை ஆட்சியராக கோவிந்தராஜ் (திருப்பூர் ஆட்சியர்)

    திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

    தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 2016-17ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு


    TRB - 2010-11 - DIRECT RECRUITMENT ENGLISH & MATHS BT ASSISTANTS

    இரண்டாம் கட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற வாய்ப்பில்லை

    இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 80 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து காலியாக உள்ள 117 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறியலாம்

    TO GET ANNUAL PAY DRAWN DETAILS FOR IT PURPOSE CLICK HERE...

    Enter your details :- 
    * Employee code (TPF/CPS number)
    * Suffix (EDN)
    * Date of birth(DD/MM/YYYY)

    புதிய வாக்காளர் சேர்க்க வாய்ப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

    தமிழகத்தில் இன்று (ஜன.,20) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு வந்த பின் புதிய வாக்காளர்கள், 'ஆன் லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்,'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 82 ஆயிரம் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் தேவை. இதில் 8,000 இயந்திரங்கள் மட்டுமே இருப்பு உள்ளன.

    கிராம பள்ளிகளை தத்தெடுக்கிறது விளையாட்டு பல்கலை

    விளையாட்டு பல்கலை துணைவேந்தர் மூர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டி: விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா, நாளை, கவர்னர் தலைமையில், ராஜ்பவனில் நடக்கிறது. இதில், பல்கலை மற்றும் அதன், 11 உறுப்புக் கல்லுாரிகளில் படித்த, 2,308 மாணவ, மாணவியரில், 161 பேர் பட்டம் பெறுகின்றனர். 

    பகுதிநேர ஆசிரியர்கள் : மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

    அனைத்து மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகளுக்கும் வணக்கம்!

    வருகின்ற ஞாயிறன்று 24.01.2016 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சரித்திரம் படைக்க நம் குரல் கோட்டையில் ஒளிக்கஉணர்வுடன் கலந்து

    வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செய்தி குறிப்பு

    அனைத்து தலைமை ஆசிரியர்களும் வழிபாட்டு கூட்டத்தில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் படிகட்டில் பயணம் செய்வதாகவும் இதனால் நடத்துனரிடம் சண்டையிட்டு, மாணவர்கள் காவல்துறையினரால் தண்டிக்கப்பட வேண்டியுள்ள சூழ்நிலை பத்திரிக்கை மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையில் உள்ளதால்,

    Tuesday, January 19, 2016

    NPR மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளில் BLO ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை விடுவிக்க கோரி திருச்சி TESTF சார்பில் ஆணையரிடம் மனு


    7th CPC Recommendation is bonanza to central govt employees at the expense of other sections of the society – Financial Express

    Financial Express has published an Article titled “Seventh Pay Commission Report: A tough challenge” . In which the author of this article opined that the 7th pay commission recommendations should not become an exercise of granting a bonanza to central govt employees at the expense of other sections of the society.

    Highlights of his observations are …

    Increasing Group ‘C’ Employees pay and allowances further, in economic terms, means only increasing the subsidy to a privileged segment of the population.

    Pay Matrix Recommended by 7th CPC is not final and subject to change – Federation Sources

    The Constituent Unions of NCJCM has called for three days’ agitation Programme from 19-1-2016 to 21-1-2016 to draw the attention of central government to settle the Modified charter of demands.

    Recently they demanded the government to constitute an empowered Committee to settle their demands through negotiation. However, the Cabinet gave its approval for constitution of an Empowered Committee to study the 7th Pay Commission report for implementation Process.

    அம்மா அழைப்பு மையம்; இன்று துவக்கி வைக்கிறார் ஜெ.,

    அம்மா அழைப்பு மையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறினால், உடனுக்குடன் உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்பட்டு பதிலளிக்கப்படும்.

    போலி ஆசிரியர் உட்பட 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

    போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும், அவருக்கு துணை சென்றவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முனியப்பன், 37. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், 42, என்பவர் மூலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் என்ற பெயரில், போலியாக ஆதிதிராவிடர் ஜாதி சான்று மற்றும் கல்வி சான்று பெற்று, குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

    68 பள்ளி, கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள்: தமிழக அரசு தகவல்

    தமிழகத்தில் 68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பால்வளத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், துறையின் அமைச்சர் பி.வி.ரமணா பேசியது: ஆவின் பால் உற்பத்தி கடந்த நான்கரை ஆண்டுகளில் நாளொன்றுக்கு சுமார் 9 லட்சம் லிட்டர் உயர்ந்து இப்போது 30 லட்சம் லிட்டர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.

    அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள்

    அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்க 10 நாள்களுக்குள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக ராஜீவ் ராஜன், ஞான சம்பந்தம் ஆகியோர் தனித்தனியே தாக்கல் மனுக்களில், " அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறுவதற்கு வசதியை ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கென ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: மாற்றுத்திறனாளிகளுக்கு செய்து தர வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய கையேட்டை மத்திய பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ளது.

    443 நீதிபதி பணியிடம் காலி

    நாடு முழுவதும் ஐகோர்ட்டுகளில், 443 நீதிபதி பணியிடங்களும், சுப்ரீம் கோர்ட்டில், ஐந்து நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த, தேசிய நீதித்துறை நியமன கமிஷன் நடைமுறைக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

    வாசித்தலே எல்லை' திட்டம் அறிமுகம் கோவையில் 150 பள்ளிகளில் ஆய்வு

    அரசு பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்பு திறனை மேம்படுத்த மத்திய அரசின் 'வாசித்தலே எல்லை' என்ற திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், 150 பள்ளிகளில் சிறப்புக்குழு சார்பில், ஆய்வுப் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.

    Monday, January 18, 2016

    மக்கள் தொகை விவரம் உறுதிபடுத்தும் பணி இன்று துவக்கம்!

    மக்கள் தொகை விவரங்களை உறுதிபடுத்தும் பணியை ஆசிரியர்கள் இன்று துவக்குகின்றனர். இந்தியாவில் கடந்த 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மூலந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வாழ்த்துகிறோம்!!!


    தேர்வு நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா? ஆசிரியர்கள் கடும் கண்டனம்


    பகுதிநேர ஆசிரியர்களுக்கான செய்தி : விடியலை தேடுங்கள்-வீணான பொய் செய்திகளை புறந்தள்ளுங்கள்

    அருமை பகுதிநேர ஆசிரியர்களே. நமக்கெல்லாம் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த பகுதிநேர ஆசிரியர் பணி ஆணை கிடைத்தது முதல் இன்றுவரை சிலர்  சொன்ன ஆயிரம் பொய்கள் எல்லாம் என்ன ஆனது?.. முதலில் ஓவிய ஆசிரியர்களை இந்த ஆணையில் போராடி அரும்பாடுபட்டு சேர்க்கசொன்னதாக சொன்னார்கள், பிறகு அதைப்போலவே ஒவ்வாரு பாடப்பிரிவுகளையும் சேர்க்க சொன்னதாககூட சொன்னார்கள்.

    மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு :ராமகோபாலன் வலியுறுத்தல்

    ''மாணவர்கள் பண்பும், அன்பும்,தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்,'' என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் தெரிவித்தார். அவர் தெரிவித்துள்ளதாவது:நீதிபோதனை வகுப்புகளை, வரும் கல்வி ஆண்டில் துவக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் நல்லொழுக்கம் குறைந்து வருவதும், பலவித குற்றங்கள் மலிந்து வருவதும் சமூக அக்கறை உள்ளவர்களை கவலை கொள்ள செய்கிறது.

    1330 குறள்களை தலைகீழாக எழுதி உலக அளவில் இரட்டை சாதனை

    கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவள்ளுவர் ஓவியத்தில் குறள்களை எழுதியும், 24 மணி நேரத்தில் 1330 குறள்களையும் தலைகீழாக எழுதியும் இரட்டை சாதனை படைத்துள்ளார். கோவை ஆலாந்துறையைச் சேர்ந்த லதா- சுப்பிரமணியத்தின் ஒரே மகள் எஸ்.ஹரிப்பிரியா (24). எம்.எஸ்சி ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

    திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க,மத்திய தகவல் ஆணையம் கட்டுப்பாடு

    பல்கலைக்கழகங்கள், தேர்வு அமைப்புகள், திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லி பல்கலை., திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பாடப்பிரிவுக்கு, 750 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

    ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதியம்'அம்போ' கணக்குகளுக்கு விடிவு

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மத்திய அரசில், 2004 முதலும்; தமிழக அரசில், 2003 முதலும், சி.பி.எஸ்., என்ற, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட, ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

    தேர்வு அமைப்புகளுக்கு திடீர் கட்டுப்பாடு

    பல்கலைக்கழகங்கள், தேர்வு அமைப்புகள், திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லி பல்கலை., திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பாடப்பிரிவுக்கு, 750 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

    கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை

    கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் ஆவணங்கள், விரைவில் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளதால், போக்குவரத்து போலீசாரின் சோதனையின் போது அவற்றின் நகல் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது. இன்சூரன்ஸ் கட்டுப்பாடு ஆணையம், 'இ - வாஹன் பீமா' என்ற புதிய திட்டத்தை துவக்கி உள்ளது. இதன்படி, இன்சூரன்ஸ் ஆவணங்கள் அனைத்தும் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளன. 

    மகப்பேறு விடுப்பை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுக்கக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் பிரவீனாமேரி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில்தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான், 23.12.2009 அன்று வருவாய்த்துறையில் உதவியாளராகபணியில் சேர்ந்தேன்.

    சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம்

    அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ முதலிடம் பெற்றார். பிரிட்டோ 800 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்கள் எடுத்து 74.38 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றார். திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் 572 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கொல்கத்தாவைச் சேர்ந்த அவினேஷ் சான்செட்டி 566 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

    Sunday, January 17, 2016

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் ஜெயலலிதா அறிவிப்பு.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்பதால், மத்தியஅரசு இதனை மிகக் கடுமையான பேரிடர் என அறிவித்துள்ளது.

    பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் சார்பாகத் தெரிவித்துக்கொண்டனர்.

    அலுவலகத்தில் டேரா போடும் ஆசிரியர்கள்: தொடக்கப்பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு

    சேலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில், பல்வேறு அலுவலக பணிகள் செய்வதாக கூறி, பல ஆசிரியர்கள் பள்ளி பணிகளை புறக்கணித்து வருகின்றனர். இதனால், பல பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.

    எம்.சி.ஏ. - எம்.இ. பட்டதாரிகளை பேராசிரியராக நியமிக்ககூடாது: ஏஐசிடிஇ உத்தரவு.

    முதுநிலை கணினி அப்ளிகேஷன்ஸ் (எம்.சி.ஏ.) முடித்து முதுநிலை பொறியியல் (எம்.இ.) பட்டம் பெற்றவர்களை பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியராக நியமிக்கக் கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

    1,105 தனியார் தமிழ் வழி பள்ளிகளை மூடப்போவதாக நிர்வாகிகள் எச்சரிக்கை.

    கல்வித்துறையால் கொண்டு வரப்பட்ட,14 (ஏ) சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், தனியார் தமிழ்வழிப் பள்ளிகளை, வரும் கல்வியாண்டில் மூடிவிடுவோம்' என, அதன் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சியில் நடந்தது. குறைந்த சம்பளம்கூட்டத்தில், தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் செபாஸ்டியன் கூறியதாவது:

    Saturday, January 16, 2016

    தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

    பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணி, இடைநிலை ஆசிரியர்கள் பணியிடை மாற்றம், பதவி உயர்வு, மற்றும் அலுவலக பணியிடங்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்று வருவதாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு புகார் சென்றது.

    30 ஆயிரம் "டெட்" ஆசிரியர்கள் தவிப்பு

    பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையில் நியமிக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் முதல் இரண்டாண்டு பணியை, பயிற்சியாக கணக்கிட வேண்டும். அந்த பயிற்சிக்கான சான்றிதழை வழங்கி, பணிமூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    ஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் :ஆசிரியருக்கு "பிரிண்ட் அவுட்' விண்ணப்பம் வழங்கல்

    மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பிற்கான "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டது. ஜன.,18 முதல் இப்பணியை ஆசிரியர்கள் துவக்குகின்றனர். 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று குடும்ப தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்து, எலக்ட்ரானிக் பொருட்கள் இருப்பு விபரம் போன்று 42 வித விபரத்தை சேகரித்து, அதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்திற்கு அனுப்பினர்.

    குரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ பதவிக்கான தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947 நேர்காணல் இல்லாத காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பரிசீலனை முடிந்த நிலையில், தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'டை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. நிராகரிப்பு பட்டியலில் இல்லாமல், முறையாக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியோருக்கு, ஹால் டிக்கெட்

    பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு

    பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்தல், பொதுத் தேர்வு பணிகளுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    கட்டணத்துக்காக மாணவர்களின் சான்றிதழ் பறிப்பு!: தனியார் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

    கட்டண பாக்கிக்காக மாணவர்களின் சான்றிதழை பிடித்து வைத்துக் கொள்ளும், கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது. தனியார் சுயநிதி கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கட்டணம் வசூலிப்பதில் பல விதிமீறல்கள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. விதியை மீறி நன்கொடை வசூலித்தல், காப்புத் தொகையாக இரண்டு மடங்கு வசூலித்தல், விடுதி நிதி, கணினி வை-பை இணைப்பு நிதி, தேர்வு, பராமரித்தல் மற்றும் கட்டட நிதி என, பல வகைகளில் வரைமுறையின்றி கட்டணம் வசூலிப்பதால், மாணவர்கள் திணறலுக்கு ஆளாகின்றனர்.

    Friday, January 15, 2016

    ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்

    ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http:218.248.44.30ecsstatus) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம். இது குறித்து கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்: அனைத்து ஓய்வூதியர்களது ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அரசு உதவி பெறும் பள்ளி அங்கீகாரம் வழங்க கெடு

    அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான, அங்கீகார பிரச்னையை சரிசெய்யும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தர விட்டுள்ளார். தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அங்கீகாரம் புதுப்பிக்கப் படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் ஊதியம், பள்ளி பராமரிப்பு செலவு, மாணவர் சலுகைகள் உள்ளிட்டவற்றை அரசே ஏற்கிறது.

    பொங்கல் பண்டிகையின் வரலாறு மற்றும் விதிமுறைகள் - படையல் பூஜை செய்திட உகந்த நல்ல நேரம்

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த நன்னாளிலே சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், அஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்யும், நம்மை காக்கும். மன்மத வருடம், தை மாதம் முதல் நாள் 15.1.2016 வெள்ளி அன்று பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். 

    மூலத்துறை அரசுப்பள்ளியின் முத்தான மாணவர்கள்...மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ...

    கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில்குமார் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு(17-01-16) மாலை 7:00 மணிக்கு "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"... நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றில் விளையாட உள்ளார்கள்.

    குரூப் 2ஏ தேர்வு: நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கலாம்; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

    குரூப் 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுள் தொகுதி 2ஏ (நேர்காணல் அல்லாத பதவிகள்) பிரிவில் அடங்கிய ஆயிரத்து 947 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 24-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு 8.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    தேசிய புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை மாற்றியமைக்க வலியுறுத்தல்

    தேசிய புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அடங்கிய குழு, அதன் விவாதப் பொருளை மாற்றியமைக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

    சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர்கள் 'டிமிக்கி

    சேலம் மாவட்டத்தில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமல், பல ஆசிரியர்கள் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், போலீசில் சிக்கிய, போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பல் கொடுத்த தகவலின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்தது தெரியவந்தது.

    'ப்ளே ஸ்கூல்'களுக்கு கட்டணம் நிர்ணயம்

    ப்ளே ஸ்கூல்' எனப்படும், கே.ஜி., முதல், 3ம் வகுப்பு வரையிலான மழலையர் பள்ளிகளுக்கான கட்டணத்தை, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயம் செய்ய உள்ளது. தமிழகத்தில், 4,000 ப்ளே ஸ்கூல்கள் உள்ளன. எப்படி இருக்க வேண்டும்? 
    * அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் அமலான ஆறு மாதத்துக்குள், ப்ளே ஸ்கூல்களுக்கான, அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், அவை மூடப்படும்.

    Thursday, January 14, 2016

    15 அம்ச கோரிக்கைகள் குறித்து முதல்வர் அவர்கள் ஜேக்டோ நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திருச்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


    திருச்சி ஜாக்டோ கூட்ட முடிவுகள்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொருளாளர் திரு தே.அலெக்சாண்டர் அறிக்கை

    10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்குட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உயர்மட்டக்குழு உருப்பினரும் மாநில பொருளாளருமான திரு தே.அலெக்சாண்டர் அவர்கள் கலந்துகொண்டார் .உடன் மாநில துணைப்பொதுசெயலர் திரு சு மா,பாலு மற்றும் திருச்சி மாவட்டசெயலர் திரு நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து திரு அலெக்சாண்டர் அவர்கள் தனது அறிக்கையில்

    மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த குழு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் குழுவை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 4 உறுப்பினர்கள் குழு, கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் வழங்கியது.

    பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

    பல நாடுகளில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட, அரசு ஊழியர் ஓய்வூதிய நிதியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

    ரயில்வேயில் 18 ஆயிரம் பணிக்கு தேர்வு:விண்ணப்பிக்க ஜன.25 கடைசி

    மத்திய ரயில்வே துறையில் 18 ஆயிரத்து காலிப்பணியிடங்களை நிரப்ப, தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.,௨௫ க்குள் 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் விபரம் :ரயில்வேயில் கமர்ஷியல் அப்ரண்டிஸ்- 703, டிராபிக் அப்ரண்டிஸ்- 1645, என்கொயரி மற்றும் ரிசர்வேஷன் கிளார்க்- 127, கூட்ஸ் கார்டு- 7561, ஜுனியர் அக்கவுன்ட்ஸ் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 1205, சீனியர் கிளர்க் மற்றும் டைப்பிஸ்ட்- 869, உதவி ஸ்டேஷன் மாஸ்டர்- 5942, டிராபிக் அசிஸ்டன்ட்- 166, சீனியர் டைம்கீப்பர்4. இப்பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இன்ஜி., மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் ஆலோசனை

    தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 535க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, சென்னை, அண்ணா பல்கலையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மொத்தம், 2.15 லட்சம் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

    முழுமையான தொடக்கக் கல்வி அளிக்கும் முதல் மாநிலம் கேரளம்: ஹமீது அன்சாரி

    அனைவருக்கும் தொடக்கக் கல்வியை முழுமையாக அளிக்கும் முதல் மாநிலமாக கேரள மாநிலம் உருவாகியுள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி புதன்கிழமை அறிவித்தார். "இது ஒரு வரலாற்றுச் சாதனை' என்றும் அவர் கூறினார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் மேலும், பேசியதாவது: கேரள அரசின் தொடர் கல்வித் திட்டம், கல்வியாளர்களின் நன்கு திட்டமிடப்பட்ட முழு எழுத்தறிவுப் பிரசாரம் ஆகியவற்றின் பலனாக, கல்வித் துறையில் மற்றுமொரு சாதனையை இந்த மாநிலம் படைத்துள்ளது.

    குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் அவசியம்

    ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தொடங்குவதற்கான ஆரம்ப கட்டமாக ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்தலை அவசியமாக்கியுள்ள தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறையினர், நியாயவிலைக் கடைகளில் ஆதார் அட்டையை நேரில் ஒரு முறை காண்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக உணவுபொருள் வழங்கும் துறை முடிவு செய்துள்ளது.

    Wednesday, January 13, 2016

    தொடக்கக் கல்வி - பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டது - மூன்றாண்டு தொடர் பணிக்காலத்தில் இரண்டாண்டு தகுதிகாண்பருவம் முடித்தும் ஆணை வழங்காமை குறித்து நடவடிக்கை சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு


    2016- புத்தாண்டை முதல் வெற்றியுடன் ஆரம்பித்தது !!! ( தமிழகம் முழுவதும் தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் Probationary ஆணை உடனடியாக பெற்று தருகிறது SSTA)

    இன்று(11.01.2016)  SSTA வின் மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை SSTA சார்பாக  தெரிவித்தனர்.

    *ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு பணி துப்புறவு பணிகளை மேற்கொள்ளுதலுக்கு நன்றி தெரிவித்ததோடு அவற்றை நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.