முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் - 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பல்வேறு கட்ட தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி விட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'திடீர்' உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாக முதலில் தகவல்க ள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தற்போது அப்போல்லோ மருத்துமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல்வர் ஜெயலலதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்ப்பட்டது., அதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது இதயவியல் மற்றும் சுவாசவியல் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.