Pages

Friday, December 2, 2016

தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல் : ஏப்ரலில் நடத்த ஏற்பாடு

ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12 ஆயிரத்து 254 ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்., 17, 19ல் நடக்கும்' என செப்., 25ல் அறிவிக்கப்பட்டது.


ஆனால், இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால், தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதுகுறித்த வழக்கு ஜன., 3க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல்களை நடத்த ஏதுவாக, துணை கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பதவி காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை என தெரிவிக்கப்பட்டது. டிச., 31ல் இவர்கள் பதவி காலம் முடிகிறது. இவர்களது பதவி காலத்தை நீடிப்பது குறித்து, அரசு இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அருந்ததியினருக்கான இடஒதுக்கீடு பணிகள் துவங்கவில்லை. இடஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு, உயர்நீதிமன்றத்திற்கு அரசு தெரிவிக்க வேண்டும். 'ஜனவரியில் பொங்கல், மார்ச்சில் அரசு பொது தேர்வுகள் வருவதால், ஏப்ரலுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகும் வாய்ப்பு உள்ளது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.