Pages

Sunday, December 25, 2016

விரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்... மாற்றம்!:ஊழல் நபர்களை நீக்கி நேர்மையானவர்களை நியமிக்க திட்டம்

தமிழக அரசுநிர்வாகத்தை,முழுமையாக மாற்றிஅமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள்பலர் மாற்றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, விடுமுறை நாளானநேற்று, முதல்வர் பன்னீர்செல்வம்,தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர், கோட்டை யில்அவசர ஆலோசனை நடத்தினர். விடுமுறை நாளான, நேற்று காலை, 10:00 மணிக்கு, புதிய தலைமை செயலர்கிரிஜா வைத்திய நாதன், தலைமை செயலகம் வந்தார்உள்துறைசெயலர், சட்டத்துறை செயலர் மற்றும்பல்வேறு துறை அதிகாரிகளைஅழைத்து பேசினார்.


பிற்பகலில்,முதல்வர்பன்னீர்செல்வம், தலைமைசெயலகம் வந்தார். தலைமை செயலருடன், அவசர ஆலோசனைநடத்தினார். முதல் வர் மற்றும்தலைமை செயலர் வந்த தால், மற்றதுறை அதிகாரிகளும் பணிக்குவந்தனர். இதனால், விடுமுறைநாளிலும், கோட்டை வட்டாரம்பரபரப்பாக இயங்கியது.


முதல்வர் - தலைமை செயலர்நடத்திய ஆலோசனையில், அரசுநிர்வாகத்தை மாற்றி அமைத்து, நலத்திட்டப் பணிகளை விரைவுப் படுத்த, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதில், முதல் கட்டமாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை,அதிரடியாகஇடமாற்றம் செய்யதிட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து,அதிகாரிகள்கூறியதாவது:
முக்கிய பதவிகளில் உள்ள, ஊழல்அதிகாரி களை அகற்றிவிட்டு,திறமையான, நேர்மை யானஅதிகாரிகளை நியமிக்க, முதல்வர்மற்றும் தலைமை செயலர் முடிவுசெய்துள் ளனர். இதற்காக, ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளின் இடமாறுதல் பட்டியல்தயாராகி வருகிறது.

அதேபோல, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவி உயர்வுக்கானகோப்பு, நீண்ட நாட்களாக கிடப் பில்உள்ளது. அதை துாசு தட்டி, தகுதியுள்ள அதிகாரிகளுக்கு, உடனடியாக பதவி உயர்வு வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போலீஸ் துறையிலும் அதிரடிமாற்றங்கள் செய்ய, முடிவுசெய்யப்பட்டு உள்ளது; அதற் கானபட்டியலும் தயாராகிவருகிறது. இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.