Pages

Monday, December 5, 2016

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: தற்போதைய நிலவரம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

உடனடியாக அவருக்கு ஆஞ்சியோகிராம் எனப்படும் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து தொலைக்காட்சி வாயிலாக அறிந்து கொண்ட பொதுமக்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.


மதியம் 12.40: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை இன்று புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முற்பகல் 11.30: சென்னை க்ரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நிறைவு பெற்றது.

காலை 11.00: அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை தொடங்கியது.

கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

காலை 10.45: க்ரீம்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை 10.25: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து புரளி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை 10.12: எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அஞ்சன் டிரிகா, தேவ கௌரவ், ஜி.சி. கில்னானி, ராஜீவ் நரங் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க தில்லியில் இருந்து வரவுள்ளனர்.

காலை 9.50: மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்  ஜே.பி. நட்டா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவர்களை தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

காலை 9.47: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அப்பல்லோ வந்து சேர்ந்தனர்.

காலை 9.46: தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 11 மணியளவில் வந்து சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. காலை 9.45: பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் எல். கணேசன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.

காலை 9.35 : ஞாயிற்றுக்கிழமை இரவைக் காட்டிலும், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்களிடையே சற்று அமைதி நிலவியது.

காலை 9.32: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.