Pages

Monday, December 5, 2016

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: லண்டன் டாக்டர் ஆலோசனையின் பேரில் தொடர் சிகிச்சை!

திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


உடல் நலக் குறைவு காரணமாக செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று நினைத்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.

ஏற்கெனவே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவைத் தொடர்புகொண்ட அப்பல்லோ மருத்துவர்கள், அவரது ஆலோசனையின் பேரில் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவக் குழு சென்னை வர இருக்கிறது.

முதல்வருக்கு இதய மற்றும் மூச்சுயியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயர் மருத்துவக் குழு அவரது உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 4 முதல் 5 மணி நேர கண்காணிப்புக்குப் பிறகுதான் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தெளிவான அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.