கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த 19- 24ம் தேதி வரை, பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது.இத்தேர்வில், தமிழகம் முழுக்க படிக்கும், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களின் விடைத்தாளை, வட்டார வாரியாக உள்ள, ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், ஆன்-லைனில் மதிப்பிடும் பணிகள், நேற்று முன்தினம் துவங்கின.இதன் முடிவுகள், ஜன., இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக, மதிப்பெண் குறியீடுவழங்கப்படும். பாடவாரியாக பின்தங்கிய மாணவர்களின் எண்ணிக்கை கண்டறிந்து, உரிய ஆசிரியருக்கு, புதுவிதமான முறையில் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும். 'குறிப்பிட்ட பள்ளியில், மாணவர்கள் அதிகளவில் தோல்வியை தழுவும் பட்சத்தில், பாட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்' என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.