Pages

Friday, December 30, 2016

ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி கழகம் அறிவிப்பு


ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுஉள்ளது. 

வங்கியில் நெரிசலை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் 'ஜீவன் பிரம்மான் போர்ட்டல்'என்ற இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம்.  இந்த வசதியை பொது சேவை மையம், அரசின் இ-சேவை மையங்கள் வழியாகவும் பெறலாம். பி.எப். அலுவலகத்தையும் அணுகலாம். இந்த மையங்களுக்கு செல்லும்போது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓய்வூதிய வழங்கு ஆணை, செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழக மண்டல ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.