Pages

Saturday, December 3, 2016

இளநிலை உதவியாளர் பணி டிச., 11ல் எழுத்து தேர்வு

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு, வரும், 11ல், எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில், காலியாக உள்ள, 75 இளநிலை உதவியாளர், உதவி சேமிப்புக் கிடங்கு அலுவலர் பணி இடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பித்தோரில், தகுதி வாய்ந்த, 3,073 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, வரும், 11ல், சென்னை, முகப்பேர் மேற்கில் உள்ள, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. அழைப்புக் கடிதம், பதிவு தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் விபரங்களை, www.tnwc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; 044 - 2230 2300 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.