வர்தா புயல் கரையை கடந்த பின்னும் 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்த பிறகும் 12 மணி நேரத்திற்கு 50 - 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை எண்ணூர் சாலையில் மரம் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வர்தா புயல் காரணமாக எண்ணூரில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனையடுத்து பல இடங்களில் மரம் விழுந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.