Pages

Monday, November 21, 2016

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன. 'எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் தவிர, அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்விலிருந்து, மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.


ஆனாலும், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், தனியார் கல்லுாரிகளின், மருத்துவ மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே நடந்தது. வரும் ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு, மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கு டிசம்பர் முதல் விண்ணப்பங்களை பெற, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. அதனால், இரு வாரங்களில், 'நீட்' தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.