Pages

Monday, November 28, 2016

ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை

ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருவள்ளூர் மாவட்ட மாநாடு, பொன்னேரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் நடந்த மாநாட்டில், கதிரவன் முன்னிலை வகித்தார்.


பொன்னேரி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து, மாநாட்டு அரங்கம் வரை நடந்த ஆசிரியர்கள் பேரணியை முன்னாள் மாநில தலைவர் இளங்கோ துவக்கி வைத்தார். திருவள்ளூர் தொகுதி எம்.பி., வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ., பலராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர்.

மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆறாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை களைய வேண்டும்; புதிய கல்வி கொள்கையை தேவையான மாற்றங்களுடன் அமல்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.