Pages

Wednesday, November 16, 2016

எல்லையை ஒட்டியுள்ள பள்ளிகளை திறக்க உத்தரவு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள, 174 பள்ளிகளை மீண்டும் திறக்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இம்மாதம், 1ம் தேதி, பாக்., படையினர் நடத்திய தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட, எட்டு பேர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர். 


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ராணுவ முகாம்கள் மீது நம் வீரர்கள் தாக்குதல் நடத்தியதில், 14 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து, இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. 

இதன் காரணமாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள, 174 பள்ளிகளுக்கு, இம்மாதம், 1ம் தேதி முதல், காலவரையற்ற விடுமுறை அளித்து, மாநில அரசு உத்தரவிட்டது. 

இதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பின், 174 பள்ளிகளையும் மீண்டும் திறக்க, மாநில அரசு உத்தரவிட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.