அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை, விரிவுபடுத்த உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'இல்லந்தோறும் இணையம்' என்ற அதிவேக அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை, மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது.
குறைந்த கட்டணம் மற்றும் சிறப்பான சேவை காரணமாக, இத்திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டாம் கட்டமாக, இத்திட்டம், அனைத்து நகராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை, வருவாய் பங்கீட்டு முறையில் வழங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, www.tactv.in என்ற இணையதளத்தில், கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், நவ., 15க்குள் வந்து சேர வேண்டும்.
'தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தொழில் துவங்க, தேசிய வங்கியில் இருந்து, கடன் பெற உதவி செய்யப்படும்' என, அரசு கேபிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.