Pages

Tuesday, November 29, 2016

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. வேலூரில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.சிவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எம்.பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சோ.சம்பத் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.


வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க மத்திய அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு அனைத்து வகை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் அளிப்பது, பதவி உயர்வில்லாத பணியிடங்களில் பணியாற்றும் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை தர ஊதியம் ரூ. 5,400 என வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.