Pages

Monday, November 28, 2016

'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

'அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


● மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, வழிபாட்டு கூட்டத்தில் அவர்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும்.
● திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய் பரவும் என்பதை, கிராமப்புற மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன், கழிப்பறைக்கு செல்லும் போது காலணி அணியும் படியும், சோப்பு பயன்படுத்தி கை கழுவும்படியும் அறிவுறுத்த வேண்டும்.
● பள்ளி வளாகத்தில் குப்பை, தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து, மாணவர்களுக்கு துாய குடிநீரை வழங்க வேண்டும்.
● நுாலகம், ஆய்வகம், வகுப்பறை, கணினிகள், ஆவணங்கள், மாணவர்கள் அமரும் பெஞ்ச் போன்றவற்றில் துாசி படியாமல், சுத்தமாக பராமரிப்பது அவசியம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.