Pages

Monday, November 21, 2016

ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு செய்து உரிய மாற்றங்கள் செய்வேன்: மோடி உறுதி

ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக மறுஆய்வு செய்து உரிய மாற்றங்களை செய்வேன் என்று மோடி உறுதி அளித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ஆக்ராவில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:


கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு பலர் உயிர்பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காய்மடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.


வரும் 2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான ஏழைகளுக்கான ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ வீட்டு வசதி திட்டத்தை தொடங்கியுள்ளோம். அனைத்து வீடுகளுக்கும் சமையல் காஸ் இணைப்பும் வழங்கப்படும்.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சில சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். உங்களின் தியாகம் வீண்போகாது. நமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இன்னும் 50 நாட்களில் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

அரசின் நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாற உள்ளது. சிட்பண்ட் ஊழல் மூலம் ஏழைகளின் பணத்தை சுரண்டியவர்கள் இன்று எனக்கு எதிராக கை நீட்டுகிறார்கள்.

கறுப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. இதுவரை வங்கிகளில் 5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக மறு ஆய்வு செய்து உரிய மாற்றங்களை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.