Pages

Wednesday, November 2, 2016

கல்லூரி கல்வி துறையில் களையெடுப்பு!

தமிழக கல்லுாரி கல்வித்துறையில், ஊழல், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, களையெடுப்பு நடவடிக்கைகளை, கல்லுாரி கல்வி இயக்குனர் துவக்கியுள்ளார். இது, துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் மீதும், உயர்கல்வி அதிகாரிகள் மீதும், சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. 


கல்லுாரிகளில், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம், முதல்வர் பதவி உயர்வு போன்றவற்றில், அரசியல் செல்வாக்கை காட்டி, பல அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

ஆனால், கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர ரத்னு நிமியக்கப்பட்ட பின், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், அரசு கல்லுாரிகளுக்கு, பணி மூப்பு அடிப்படையில், 35க்கும் மேற்பட்ட முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர்.


புதிய பட்டியல்: 

பல பேராசிரியர்கள், இடைத்தரகர்கள் மூலம், பதவி உயர்வுக்கு முயற்சித்த நிலையில், அந்தப் பட்டியலை நிராகரித்து, புதிய பட்டியலை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர ரத்னுவே தயாரித்து, பதவி உயர்வு அளித்ததாகவும், அதற்கு உயர் கல்வித்துறை சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக பொதுச் செயலர், தாமோதரன் கூறியதாவது: 

பிரச்னை குறையும்கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்புக்கு வந்துள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர ரத்னு, தன் நேரடி மேற்பார்வையில், நிர்வாக பணிகளை ஆய்வு செய்கிறார். 

புகார்களுக்கு இடமின்றி, பலர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். உயர்கல்வி அமைச்சகத்திலும் எந்த குறுக்கீடும் இல்லை. இதேநிலை தொடர்ந்தால், கல்லுாரி கல்வியில் பிரச்னைகளை குறைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.