பி.ஜி., டிப்ளமோவுக்கான 'நீட்' தேர்வு நெருங்கும் நிலையில், கிராமப்புற மருத்துவமனைகளின் பட்டியலை, தமிழக அரசு, மத்திய அரசுக்கு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பணி செய்யும் மாணவர்கள், 'போனஸ்' மதிப்பெண்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் பி.ஜி., டிப்ளமோவில் சேர, இந்திய அளவில் 'நீட்' தேர்வு எழுத வேண்டும்.
கிராமப்புற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்ய பெரும்பாலான டாக்டர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அங்கு வேலை செய்யும் டாக்டர்களுக்கு, பி.ஜி., டிப்ளமோவுக்கான 'நீட்' தேர்வில், 'போனஸ்' மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. பணிபுரியும் ஒவ்வொரு ஆண்டிற்கும் 10 சதவீதம் வீதம், ௩௦ சதவீதம் வரை 'போனஸ்' மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது. அவற்றை நடைமுறைப்படுத்த, கிராமப்புறம் மற்றும் தொலைதுார மருத்துவமனைகளில் பட்டியலை மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.அடுத்த மாதம் தேர்வு நடக்கவுள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை அப்பட்டியலை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. எனவே, கிராமப்புறங்களில் வேலை செய்பவர்கள் 'போனஸ்' மதிப்பெண்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பணி செய்ய ஆர்வம் காட்டும் ஒரு சிலரும், நகர்புறங்களை நோக்கி நகரக்கூடும் என டாக்டர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.