Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 8, 2016

    65 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து வழங்க இலக்கு

    தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 65 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாம் திங்கள்கிழமை (நவ.7) தொடங்கியது. மேலும், இந்த முகாம் வரும் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


    இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறியது: குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின் ஏ திரவம் விளங்குகிறது. இந்த திரவம் வழங்குவதால் கண் பார்வைக் குறைபாடு முற்றிலும் தடுக்கப்படுகிறது.

    மேலும், கல்லீரலில் உள்ள வைட்டமின் ஏ சத்து, குழந்தை பிறந்த 4 மாதங்களில் குறைய ஆரம்பித்து, 6 மாதங்களில் மிகவும் குறைந்துவிடும். இதைத் தவிர்க்கும் நோக்கத்தில் 6 மாத குழந்தைகள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை வைட்டமின் -ஏ திரவம் வழங்கப்பட்டு வருகிறது.

    6 நாள்கள்: இந்த முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும். இந்த முகாம்களில் வரும் 12-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல், மாலை 3 மணி வரை 6 நாள்களுக்கு வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: