Pages

Wednesday, November 30, 2016

போக்குவரத்து ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்

அரசு பஸ் ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாயை, ரொக்கமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில், 1.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காரணமாக, இந்த மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாய் மட்டும் ரொக்கமாக வழங்க, போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதில், மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும், 22 ஆயிரத்து, 400 ஊழியர்கள் பயனடைவர். அவர்கள், ஒரு வாரத்திற்கு, ஏ.டி.எம்.,களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.