Pages

Tuesday, November 22, 2016

இளைஞர் வேலை வாய்ப்பு முகாம்; நவ.28ல் நடக்கிறது

படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், 28ம் தேதி காலை 10:00 மணிக்கு, தேனி கம்மவார் இன்ஜினியரிங் கல்லுாரியில் நடக்கிறது. முகாமை டு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வு திட்டம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்துகிறது. மதுரை, சேலம், திருச்சி, சென்னை, கோவை போன்ற பகுதிகளில் இருந்து வேலை வாய்ப்பு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 


தகுதியுடை இளைஞர்கள் ஆண்கள் மற்றும் பெண் தேர்வு செய்யப்பட உள்ளனர். 1835 வயதுக்குட்பட்ட 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் இன்ஜி., மாணவர்கள் பங்கேற்கலாம். 

முகாமிற்கு வரும்போது, ரேஷன் கார்டு நகல், கல்விச்சான்று நகல்கள், ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரவேண்டும் என, கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.