மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளத்து. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் இனி ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே பட்ஜெட் இனி தனியாக தாக்கல் செய்யப்படாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து மாலையில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெடை 16 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது.
அதே போல் இப்போது மீண்டும் ஒரு மிகமுக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 28ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர் இனி ஜனவரி மாதம் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.