'தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பல்லை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, தொழில் படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள், டிச., 10ல் துவங்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், தேர்வுகள் நடக்கும்.
டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். ஹால் டிக்கெட், டிச., 3ல், பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கான முழு கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விபரத்தை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.