தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நிலவும் வங்கி நடைமுறைகளால் பணம் எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும் ஆண்டு இறுதியாக உள்ளதால் விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள் வங்கிக்கு பணம் எடுக்கச் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே நவம்பர் மாத ஊதியத்தை வங்கிக்குச் சென்று எடுக்க வசதியாக வரும் சனிக்கிழமை (03.12.16) நடைபெற உள்ள குறுவளமைய அளவிலான பயிற்சியினை ஒத்திவைத்து வேறொரு நாளில் நடத்திட அரசு ஆவன செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்க கல்வி துறையும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் ஆசிரியர்களின் இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.