Pages

Sunday, October 30, 2016

பி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை

தீபாவளியை முன்னிட்டு, 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, இலவச, 'டாக் டைம், இன்டர்நெட் டேட்டா' உடன் கூடிய புதிய சலுகையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்துள்ளது. 


இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'பிரீடம்' என்ற, இந்த புதிய சலுகையை பெறுவதற்கு, 135 ரூபாய் கொடுத்து முதலில், 'ரீசார்ஜ்' செய்ய வேண்டும். அப்படி செய்பவர்கள், உள்ளூர் அல்லது வெளியூர் அழைப்புகள், தரைவழி தொலைபேசி ஆகியவற்றிற்கு, நிமிடத்திற்கு, 25 காசு கட்டணத்தில் பேசலாம். இதில், மூன்று வகையாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது. முதலில், 577 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், முழு டாக் டைம், 30 நாள், 'வேலிடிட்டி' உடன் கூடிய ஒரு, 'ஜி.பி., இன்டர்நெட் டேட்டா' கிடைக்கும். இதுதவிர, 377 ரூபாய் மற்றும், 178 ரூபாய் ரீசார்ஜ் வசதிகளும் உள்ளன. அவற்றில், இன்டர்நெட் டேட்டா அளவு, 300 எம்.பி., மற்றும், 200 எம்.பி., ஆக இருக்கும். இந்த, பிரீடம் சலுகை, 730 நாட்கள் அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.