Pages

Monday, October 24, 2016

புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன?

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டம் குறித்து, தமிழக அரசின் நிலையை, பள்ளிக் கல்வி அமைச்சர், டில்லியில் நாளை அறிவிக்கிறார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில் வெளியானது. அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியது. கருத்துக் கேட்பு, செப்., 30ல் முடிந்தது.


இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில கல்வி அமைச்சர்களுடன், கல்விக்கான மத்திய அரசு குழு, நாளை ஆலோசனை நடத்துகிறது. எட்டாம் வகுப்பு வரை அமலில் உள்ள, 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது, 10ம் வகுப்பில், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத் திட்டத்திலும், கட்டாய பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.இதில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபீதா உள்ளிட்டோர் பங்கேற்று, புதிய கல்விக் கொள்கை குறித்து, தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.