Pages

Thursday, October 13, 2016

வி.ஐ.டி., மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது

நோய் தடுப்புக்கான புதிய ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடித்த, வி.ஐ.டி., பல்கலைக்கழக மாணவரான, பிரசாந்த் மனோகர், 20, என்பவருக்கு, ஐரோப்பா - இந்தியா இணைந்த அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கி கவுரவித்து உள்ளது. ஐரோப்பா மற்றும் இந்தியா நாடுகளில், அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும்,

அதற்கான ஆராய்ச்சி திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், 2009ல், இந்தியா மற்றும் ஐரோப்பா ஒன்றியம் இணைந்து, 'இன்னோ இண்டிகா அண்டு இண்டிகோ' கொள்கையை உருவாக்கியது. இந்த அமைப் பின் மூலம், இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளை, பல நாட்டு அமைப்பு களுடன், வேலுார், வி.ஐ.டி., பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகிறது.சமீபத்தில், புதிய ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி போட்டியில், வேலுார், வி.ஐ.டி., பல்கலைக் கழகம் ஈடுபட்டது. வி.ஐ.டி., உயிரி அறிவியல் மற்றும் பள்ளியின் ஆராய்ச்சி மாணவன் பிரசாந்த் மனோகர், 2014ல், தன் ஆராய்ச்சியைத் துவங்கினார். இரண்டு ஆண்டு களுக்குப் பின், பேஜ் தெராபி என்ற புதிய ஆன்டிபயாடிக் குறித்து, கட்டுரை எழுதினார். பல கட்டத் தேர்வுக்குப் பின், பிரசாந்த் மனோகரின் கட்டுரை, முதல் பரிசு வென்றது.அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான, இளம் விஞ்ஞானி விருது, பிரசாந்த் மனோகருக்கு வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவரை, வி.ஐ.டி., வேந்தர் ஜி.விஸ்வநாதன், இணை தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.